அலூட் மக்கள்
(அலூட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அலூட் (Aleuts) எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை உனாங்கா என்றும் உனாங்கன் என்றும் அழைக்கின்றனர்.
அலூட் மக்களின் பாரம்பரிய உடை | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
17,000 முதல் 18,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஐக்கிய அமெரிக்கா | 17,000[1] |
உருசியா | 700 |
மொழி(கள்) | |
ஆங்கிலம், ரஷ்ய மொழி, அலூட் | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம், ஷாமனிசம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
இனூயிட், யூப்பிக் |
அமைவு
தொகுஅலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ including 5,000 part-Aleut[மேற்கோள் தேவை]
வெளி இணைப்புகள்
தொகு- (உருசிய மொழியில்) கமாண்டர் தீவுகள், ரஷ்யா பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம்
- (உருசிய மொழியில்) அலூட் பரணிடப்பட்டது 2011-05-01 at the வந்தவழி இயந்திரம்
- (ஆங்கிலம்) The AMIQ Institute - a research$project documenting the Pribilof Islands and their inhabitants