அலெக்சாண்டர் லுகசெங்கோ
அலெக்சாந்தர் கிரிகோரியெவிச் லுக்கசேங்கோ (Alexander Grigoryevich Lukashenko, பெலருசிய மொழி: Аляксандр Рыгоравіч Лукашэнка, உருசியம்: Александр Григорьевич Лукашенко, பிறப்பு: ஆகத்து 30, 1954) பெலருஸ் நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் (சனாதிபதி) ஆவார். 1994 முதல் தொடர்ந்து இப்பதவியில் இருக்கிறார்.[1] லுக்கசேங்கோ அரசுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணை ஒன்றில் பணிப்பாளராகவும், சோவியத் எல்லைப் படைப் பிரிவிலும் பணியாற்றிய பின்னர் அரசியலுக்கு வந்தார். இவரே பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிவதற்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு அரசுப் பிரதிநிதியாவார். மேலும் இவர் ஐரோப்பா வின் இறுதி சர்வாதிகாரியாக கருதப்படுகிறார்.[2][3]
அலெக்சாந்தர் லுக்கசேங்கோ Alexander Lukashenko | |
---|---|
லுக்கசேங்கோ (2015) | |
பெலருசின் அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 சூலை 1994 | |
முன்னையவர் | மீச்சிசிலாவ் இரீப் பெலருசு சோவியத் தலைவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அலெக்சாந்தர் கிரிகோரியெவிச் லுக்கசேங்கோ 30 ஆகத்து 1954 கோப்பிசு, சோவியத் ஒன்றியம் (இன்றைய பெலருஸ்) |
அரசியல் கட்சி |
|
துணைவர் | கலீனா செல்னெரோவிச் (1975–இன்று) |
பிள்ளைகள் |
|
இணையத்தளம் | president |
Military service | |
பற்றிணைப்பு | |
கிளை/சேவை |
|
சேவை ஆண்டுகள் |
|
தரம் | பெலருசின் மார்சல் |
குற்றச்சாட்டுகளும், சர்ச்சைப் பேச்சுகளும்
தொகு- உருசியா அதிபர் விளாதிமீர் புடினுக்கு மிகவும் நெருக்கமான இவர், 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பிற்காக ருசியாவின் ஆயுதப்படைகளை தனது பெலருஸ் மண்ணில் தங்கியிருக்க அனுமதி அளித்ததுடன், உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை நோக்கி ருசியப் படைகள் படைகள் நகர்ந்து செல்வதற்கும் உதவியவர் என இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
- 2020ஆம் ஆண்டு நடந்த பெலருஸ் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், லூகஷென்கோவை ருசிய அதிபர் புதின் ஆதரித்தார். லூகஷென்கோவுக்கு எதிராக பெருமளவு போராட்டங்கள் நடந்த போதிலும் அவர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார்.
- கடந்த 2022 சனவரியில் உக்ரேன் மீது ருசியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கை பரவிய நிலையில், இவர் பெலருஸ் படைகளை, ருசியப்படைகளுடன் இணைந்து கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்த அனுமதி அளித்தார்.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் அலெக்சாண்டர் லுக்கசேங்கோ தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- ↑ "Belarus – Government". The World Factbook. Central Intelligence Agency. 18 திசம்பர் 2008. Archived from the original on 2008-12-10. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2008.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Alexander Lukashenko | The autumn of the autocrat
- ↑ Belarus President Alexander Lukashenko under fire