அலெக்சி எக்கிமோவ்

அலெக்சி இவானொவிச் எக்கிமோவ் (Alexey Ivanovich Ekimov, உருசியம்: Алексе́й Ива́нович Еки́мов, பிறப்பு: 28 பிப்ரவரி 1945)[1] ஒரு உருசிய-சோவியத்[2] திட நிலை இயற்பியலாளர் ஆவார், இவர் வாவிலோவ் அரசு ஒளியியல் நிறுவனத்தில் பணிபுரியும் போது குவாண்டம் புள்ளிகள் எனப்படும் குறைக்கடத்தி மீநுண்படிகங்களைக் கண்டுபிடித்தார்.[3] 1967- ஆம் ஆண்டில், இவர் லெனின்கிராட் மாநில பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத்தில் பட்டம் பெற்றார். குறைக்கடத்திகளில் எலக்ட்ரான் சுழல் மின்னணுவியல் நோக்குநிலை குறித்த பணிக்காக அவருக்கு 1975 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் மற்றும் பொறியியலுக்கான மாநிலப் பரிசு வழங்கப்பட்டது. அலெக்சாந்தர் எஃப்ரோசு, லூயிசு யூஜின் புரூசு ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட "மீநுண்படிக குவாண்டம் புள்ளிகள் அவற்றின் மின்னணு மற்றும் ஒளியியல் பண்புகளின் முன்னோடி ஆய்வுகள்" குறித்த பணிகளுக்காக அமெரிக்காவின் ஒளியியல் குமுகத்தின் 2006 இல் ஆர். டபிள்யூ. உட் பரிசினைப் பெற்றவர்.[4]

அலெக்சி எக்கிமோவ்
Alexey Ekimov
இயற்பெயர்Алексей Екимов
பிறப்புஅலெக்சி இவானொவிச் எக்கிமொவ்
28 பெப்ரவரி 1945 (1945-02-28) (அகவை 79)
சோவியத் ஒன்றியம்
துறைவேதியியல்
குவைய வேதியியல்
பணியிடங்கள்இயோஃப் கல்விக்கழகம்
வாவிலோவ் அரசு ஒளியியல் கல்விக்கழகம்
கல்விலெனின்கிராது மாநிலப் பல்கலைக்கழகம் (இ.அ)
இயோஃப் கல்விக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுகுறைக்கடத்தி நுண்படிகங்களில் குவையப் பரிமாண நிகழ்வுகள்,
உருசியம்: Квантовые размерные явления в полупроводниковых микрокристаллах
 (1989)
விருதுகள்சோவியத் அரசப் பரிசு (1976),
ஆர். டபிள்யூ. வுட் பரிசு (2006),
வேதியியலுக்கான நோபல் பரிசு (2023)

1999 ஆம் ஆண்டு முதல் எகிமோவ் நியூயார்க் மாநிலத்தில் உள்ள நானோகிரிஸ்டல்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் அறிவியலாளராகப் பணியாற்றி வரும் இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

எக்கிமொவ், புருசு, மௌங்கி பவெண்டி, ஆகியோர் "குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக" வேதியியலுக்கான 2023 நோபல் பரிசு பெற்றனர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சி_எக்கிமோவ்&oldid=3804793" இலிருந்து மீள்விக்கப்பட்டது