அலைவு ( Oscillation) என்பது ஒரு நடு அளவில் இருந்து அல்லது இருவேறு நிலையின் இடையில் இருந்து தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருப்பதை குறிப்பதாகும் . இவ்வகையான இயக்கத்தை அலைவுறு இயக்கம் என்று அழைக்கப்படும் . வேறு வார்த்தையில் , ஒரு பொருளானது இரு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஒரு மையப் புள்ளியை பொருத்து தொடர்ந்து அசைவதை அலைவுறு இயக்கம் என்றும் அச்செயலுக்கு அலைவுகள் என்றும் கூறப்படும் .

அதிர்வுகளும் , அலைவுகளும் சில நேரங்களில் ஒரே பொருளாக கையாளப்படும் . சில நேரங்களில் , இயந்திர அலைவுகள் அதிர்வுகள் என்றும் கூறப்படும் . அலைவுகள் இயற்பியல் சாதனங்களால் மட்டும் ஏற்படுவதில்லை , உயிரியல் சூழ்நிலையினாலும் ஏற்படுவதாகும் .

இணை அலைவுகள்

தொகு

இரண்டு திணிவுடன் , மூன்று சுருள்விற்களை ஒரு மையப்புள்ளியில் பொருத்தினால் ஏற்படும் அலைவுகள் இணை அலைவுகள் ஆகும் . சீரிசை அலைவுகளுக்கும் , அதன் தொடர் சாதனைகளுக்கும் ஒரே சுயாதீன அளவுகள் ஆகும்.

தடையுறு அலைவுகள்

தொகு
 
தடையுறு அலைவுகள்

காற்றில் அல்லது ஏதேனும் ஒரு ஊடகத்தில ஏற்படும் அலைவுகள் பெரும்பாலும் தடையுறக்கூடியதாகவே இருக்கின்றன. அலைவுகளின் போது ஊடகங்களின் உராய்வு அல்லது காற்றுத்தடை காரணமாக தடையுறச் செய்யும் விசை ஏற்படுகிறது, எனவே , தடையுறு விசையிலிருந்து மீண்டு வரும்போது ஆற்றலின் ஒரு பகுதி வீணாகிறது. ஆக அலைவுகளின் வீச்சுக்காலத்தைச் சார்ந்து குறைந்து பின் சுழியாகிவிடும். இவ்வகை அலைவுகளே தடையுறு அலைவுகள் எனப்படும். தடையுறு அலைவுகளுக்குச் சிறந்த சான்றுகளாகக் காற்றில் அலைவுறும் தனி ஊசல், தொட்டிச் சுற்றில் உருவாகும் மின்காந்த அலைவுகள் போன்றவற்றைக் கூறலாம்.

திணிப்பு அலைவுகள்

தொகு

பொருளொன்றின் மீது சீரலைவு விசையைச் செயல்படுத்தி, இயல் அதிர்வெண் அல்லாமல் விசையின் அதிர்வெண்ணில் அதிர்வடையச் செய்தால், அந்த அலைவுகளை திணிப்பு அலைவுகள் எனலாம். புறவிசையை "இயக்கி" என்றும் அதிர்வடையும் பொருளை "இயங்கி" என்றும் கூறலாம். புறச்சீரலைவு விசையானது, பொருளை அதிர்வடையச் செய்கிறது. இயக்கி மற்றும் இயங்கியின் அதிர்வெண் வேறுபாட்டினைக் கொண்டு திணிப்பதிர்வின் வீச்சினைக் கணக்கிடலாம். அதிர்வெண் வேறுபாடு அதிகமாக இருப்பின் திணிப்பு அலைவுகளின் வீச்சு குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டுகள்: கம்பிகள் உள்ள இசைக் கருவிகளின் அமைப்பு திணிப்பு அதிர்விற்கு உட்படுகிறது.

ஒத்ததிர்வு

தொகு
 
இப்படத்தில் சுருள்வில் தொடர்ச்சியாக பல அதிர்வெண்களுக்கு உட்படுத்தப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு வீச்சு அதிகமாக காணப்படுகிறது(மேலிருந்து இரண்டாவது காணவும்). ஏனென்றால் அந்த குறிப்பிட்ட அதிர்வெண்ணும் சுருள்வில்லின் இயற்கை அதிர்வெண்ணும் ஒத்து இருப்பதால் ஒத்திர்வு ஏற்பட்டு வீச்சு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

திணிப்பதிர்வில், அதிர்வெண் வேறுபாடு குறைவாக இருப்பின் வீச்சு அதிகமாக இருக்கும். இரு அதிர்வெண்களும் சமமாக இருப்பின் வீச்சு பெருமமாக இருக்கும். இந்நிகழ்வு திணிப்பதிர்வில் ஒரு சிறப்பு நிகழ்வாகும். புறச்சீரலைவு விசையின் அதிர்வெண்ணும் அமைப்பின் அலைவின் இயல் அதிர்வெண்ணும் சமமாக இருப்பின், அலைவின் வீச்சு மிக அதிகமாக இருக்கும். இதனை ஒத்ததிர்வு என்கிறோம். ஒத்ததிர்வுகளால் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நன்மைக்கு உதாரணமாக, வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தொட்டிச் சுற்றில் ஒத்ததிர்வைப் பயன்படுத்தி தேவையான அதிர்வெண்ணைப் பெறலாம். தீமைக்கு உதாரணமாக, நிலநடுக்கத்தின் போது ஒத்ததிர்வு அழிவை ஏற்படுத்தும். நிலநடுக்கத்தினால் ஏற்படும் சீரலைவுகளின் அதிர்வெண் கட்டிடங்களின் அதிர்வெண்ணிற்குச் சமமாக இருந்தால், பெரும வீச்சுடன் கட்டிடங்கள் அலைவுற்று சிதைய நேரிடும்.

தொடரலை சாதனங்கள்

தொகு

எடுத்துக்காட்டுக்கள்

தொகு

இயந்திரவியல்

தொகு

மின் இயந்திரவியல்

தொகு

மின்னியல்

தொகு

ஒளியியல்

தொகு

இதனையும் பாருங்கள்

தொகு

அலைவுகள் (கணிதம்)
நிலநடுக்க பொறியியல்
அதிர்வுகள்
கால அளவு
அலைபெருக்கி ( Resonator ) தொடரலை ( Periodic wave or function )

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைவு&oldid=3683059" இலிருந்து மீள்விக்கப்பட்டது