அலோக் குமார் சுமன்

மருத்துவர் அலோக் குமார் சுமன் (Alok Kumar Suman) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராக கோபால்கஞ்சு மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய பொருளாளராகவும் உள்ளார்.[1]

மருத்துவர் அலோக் குமார் சுமன்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை,
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
தொகுதிகோபால்கஞ்ச்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோபால்கஞ்ச்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
தொழில்சமூகப்பணி, அரசியல்வாதி, மருத்துவர்

இளமையும் கல்வியும்

தொகு

சுமன், பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜடோபூர் துகாகரன் என்ற இடத்தில் சாமர் (தலித்) பிரிவில் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாட்டியா தேவிக்கு மகனாகப் பிறந்தார். அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஆரம்பக் கல்வியைத் தொடரவும் பண்ணைகளில் குழந்தைத் தொழிலாளியாகப் பணிபுரிந்தார்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இந்தியப் பள்ளிச் சான்றிதழுக்காக பாட்னா அறிவியல் கல்லூரிக்குச் சென்றார். பின்னர் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளநிலை மருத்துவம் இளநிலை அறுவை சிகிச்சை மற்றும் முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவக் கல்வியினை முடித்தார்.[2]

தொழில்

தொகு

கல்விக்குப் பிறகு, தில்லியில் உள்ள ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் உள்ளக மருத்துவராகப் பணிபுரிந்து பீகார் மாநில மருத்துவ துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் "குழந்தைகளில் வயிற்று குடலிறக்கம்" என்ற அறிவியல் ஆய்வறிக்கையை எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gopalganj Election Results 2019 Live Updates: Dr. Alok Kumar Suman of JD(U) Wins". News18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Alok Kumar Suman | National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  3. Ram, Janak. "Lok Sabha Members". Parliament of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோக்_குமார்_சுமன்&oldid=4007531" இலிருந்து மீள்விக்கப்பட்டது