அல்டாமிராக் குகை

அல்டாமிரா குகை (Cave of Altamira) யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். இது வடக்கு எசுப்பானியாவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற குகை மற்றும் பாறை ஓவியங்களாகும். இதில் காட்டு விலங்குகள் மற்றும் மனிதனின் கைகள் வரையப்பட்டுள்ளன. இதன் காலம் கி.மு. 14000 என வரையறுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மிகப்பழைய ஓவியம் 35,000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகக் கருதப்படுகிறது. அல்டாமிரா என்பதன் வார்த்தை எசுப்பானிய மொழியிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் உயர்ந்த பார்வை என்பதாகும்.[1]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வடக்கு எசுப்பானியாவில் அமைந்துள்ள அல்டாமிராக் குகை
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Replica at Museo Arqueológico Nacional of Cave of Altamira
வகைபாரம்பரியம்
ஒப்பளவுi, iii
உசாத்துணை310
UNESCO regionEurope and North America
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1985 (9th தொடர்)
விரிவாக்கம்2008
அல்டாமிராக் குகை is located in எசுப்பானியா
அல்டாமிராக் குகை
Location of அல்டாமிராக் குகை in Spain.

இவ்விடம் எசுப்பானியாவில் உள்ள காண்டாபிரியா, வடக்கு சாண்டாண்டருக்கு முப்பது கி.மீ. தொலைவில் உள்ளது. வரலாற்றுக்கு முந்திய கால ஓவியங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட ஐரோப்பாவில் உள்ள முதல் குகை இதுவாகும். மார்செலினோ சான்சு டி சவுத்துவோலா என்பவரே இதை வெளிப்படுத்திப் பிரபலப்படுத்தினார். இவர் விலனோவா யி பியேரா என்பவரின் உதவியுடன் தனது ஆய்வை 1880ல் வெளியிட்டார். எனினும், இதன் தொன்மை குறித்து அறிஞர்களிடையே சர்ச்சை ஏற்பட்டு 1902 ஆம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் இப்பகுதியில் மேலும் பல வரலாற்றுக்கு முந்திய கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இதன் தொன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2]

பார்வையாளர்கள் தொகு

 
அல்டாமிராக் குகை ஓவியங்கள் மீள் உருவாக்கம்

1960 ஆண்டு மற்றும் 1970 ஆண்டு காலப்பகுதிகளில், இந்தக் குகை ஓவியங்கள் பார்வையாளர்களாக வந்த அதிக எண்ணிக்கையான மக்களின் மூச்சுக் காற்றிலிருந்து வெளியான காபனீர்ஆக்சைட்டால் பாதிக்கப்பட்டது. அல்கம்பிராக் குகை மக்கள் பார்வை இட முடியாத வாறு 1977 மூடப்பட்டது, மீண்டும் 1982 திறக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு மக்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. ஒரு நாளிற்கு மிகவும் குறைந்த அளவு பார்வையாளர்களே குகையைக் காண அனுமதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் மூன்றுவருடங்கள் குகையைக் காணக் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தேசிய அல்டாமிரா குகை ஆராய்ச்சி நிலையம் இதன் அருகில் நிறுவப்பட்டு 2001ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு அல்டாமிராக் குகை ஓவியங்களை காணலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. de Bruxelles, Simon (June 15, 2012). "Prehistoric cave art began 10,000 years earlier". The Times. http://www.thetimes.co.uk/tto/science/archaeology/article3445847.ece. 
  2. Busch, Simon (February 28, 2014). "Prehistoric paintings in Spain's Altamira cave revealed to a lucky few". Cable News Network. பார்க்கப்பட்ட நாள் December 19, 2016.

புத்தக விவரணம் தொகு

  • Curtis, Gregory. The Cave Painters: Probing the Mysteries of the World's First Artists. New York: Alfred A. Knopf, 2006 (hardcover, ISBN 1-4000-4348-4)).
  • Guthrie, R. Dale. The Nature of Prehistoric Art. Chicago: University of Chicago Press, 2006 (hardcover, ISBN 0-226-31126-0).
  • McNeill, William H. "Secrets of the Cave Paintings", The New York Review of Books, Vol. 53, No. 16, October 19, 2006.
  • Pike, A. W. G.; Hoffmann, D. L.; Garcia-Diez, M.; Pettitt, P. B.; Alcolea, J.; De Balbin, R.; Gonzalez-Sainz, C.; de las Heras, C.; Lasheras, J. A.; Montes, R.; Zilhao, J. (14 June 2012). "U-Series Dating of Paleolithic Art in 11 Caves in Spain". Science 336 (6087): 1409–1413. doi:10.1126/science.1219957. 

வெளி இணைப்புக்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டாமிராக்_குகை&oldid=2695749" இலிருந்து மீள்விக்கப்பட்டது