அல்டினா சினாசி
அல்டினா சினாசி ( Altina Schinasi ) (ஆகஸ்ட் 4, 1907 - ஆகஸ்ட் 19, 1999) ஒரு அமெரிக்கச் சிற்பியும், திரைப்பட தயாரிப்பாளரும், தொழில்முனைவோரும், சாரள அலங்காரம், வடிவமைப்பாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். "ஹார்லெக்வின் கண் கண்ணாடி சட்டகம்" என்று இவர் அழைத்த கேட்-ஐ கிளாஸ் என்று பிரபலமாக அறியப்படுவதை வடிவமைப்பதில் மிகவும் பிரபலமானவர்.
அல்டினா சினாசி | |
---|---|
பிறப்பு | நியூயார்க்கு நகரம், நியூயார்க்கு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | ஆகத்து 4, 1907
இறப்பு | ஆகத்து 19, 1999 Santa Fe, நியூ மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 92)
குறிப்பிடத்தக்க படைப்புகள் | "ஹார்லெக்வின் கண் கண்ணாடி சட்டகம்" ஜியார்ஜ் குரோஸ் இன்டரெக்னம் 1960 |
விருதுகள் | ஜியார்ஜ் குரோஸ் இன்டரெக்னம் |
Patron(s) | கிளார் பூத் லூசி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஆகஸ்ட் 4, 1907 இல் மன்ஹாட்டனின் மேல் மேற்குப் பகுதியில் உள்ள சினாசி மாளிகையில் சினாசி குடும்பத்தில் இளைய குழந்தையாக பிறந்தார்.[1] வீட்டிலேயே பயிற்றுவிக்கப்பட்ட பிறகு, அல்டினா ஹோரேஸ் மான் பள்ளியில் பயின்றார். மேலும் பன்னிரண்டாவது வயதில் மாசசூசெட்ஸில் உள்ள வெல்லஸ்லியில் உள்ள டானா ஹால் பள்ளியில் தங்கி பயின்றார்.[2]
அல்டினாவின் தாயார், டானா ஹாலில் பட்டம் பெற்ற சிறிது காலத்திற்குப் பிறகு அல்டினாவையும் இவரது சகோதரியையும் பாரிஸுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அல்டினா தனது உறவினரான ரெனே பென்சுசனிடம் ஓவியம் பயின்றார். பென்சுசனுடன் இருந்த காலத்தில் கலையின் மீது ஆழ்ந்த மதிப்பை வளர்த்துக் கொண்டார். இதன் விளைவாக, அல்டினா மாநிலங்களுக்குத் திரும்பியபோது கல்லூரியில் சேருவதை விட கலைப் பள்ளியில் சேரத் தேர்ந்தெடுத்தார். நியூயார்க்கில், அல்டினா ரோரிச் அருங்காட்சியகத்தில் சாமுவேல் ஹால்பர்ட்டுடன் படித்தார்.[3]
சாரளங்கள் அலங்காரம் செய்பவர்
தொகுஅல்டினா, பீட்டர் கோப்லேண்ட் என்பவருடன் சேர்ந்து ஐந்தாவது அவென்யூ கடைகளுக்கான சாரங்களை வடிவமைக்கும் வேலையை மேற்கொண்டார். இந்த வேலையில் தான் இரண்டு போன்விட் டெல்லர் சாரளங்களை வடிவமைக்க நியமிக்கப்பட்ட சால்வதோர் தாலீயுடன் இணைந்து பணியாற்றினார். தாலீ வடிவமைத்த சாரளங்களை உருவாக்க அல்டினா கோப்லாண்ட் பட்டறையில் பணியாற்றினார்.
1932 இல் இட்லரின் ஆட்சியிலிருந்து தப்பி நியூயார்க்கில் குடியேறிய ஜெர்மன் கலைஞரான ஜார்ஜ் க்ரோஸ் என்பவரை நீண்டகாலமாக பின்பற்றினார்.[4]
மரியாதை
தொகுஆகஸ்ட் 4, 2023 அன்று, கூகுள் அல்டினா சினாசியின் 116வது பிறந்தநாளை தனது கேளிச்சித்திரத்துடன் [5] கொண்டாடியது. அதில் "ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் தொலைநோக்கு பார்வை கொண்ட பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறியது. இவரது மகன் டெர்ரி சாண்டர்ஸ் தனது குடும்பத்தினர் சார்பாக "பிறந்தநாள் வாழ்த்துக்கள், டினா! உங்கள் தைரியம், கருணை மற்றும் உத்வேகத்திற்கு நன்றி. எப்போதும்" என்ற ஒரு குறிப்பைப் பகிர்ந்து கொண்டார்.
சான்றுகள்
தொகு
- ↑ Schinasi, p. 6
- ↑ Schinasi, p. 38
- ↑ Schinasi, p. 88
- ↑ Schinasi, p. 177
- ↑ "Google celebrates life of artist Altina Schinasi" (in en-IN). தி இந்து. 2023-08-04. https://www.thehindu.com/life-and-style/fashion/google-celebrates-life-of-artist-altina-schinasi/article67156928.ece.
குறிப்புகள்
தொகு- Schinasi Miranda, Altina. The Road I Have Traveled. Santa Fe: Apodaca Hill Press, 1995
- "Altina Schinasi Miranda, 92, Designer of Harlequin Glasses". The New York Times. 1999-08-21.
- "The 33rd Academy Awards (1961) Nominees and Winners". Archived from the original on 6 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-07-09.
- "Altina Trailer". பார்க்கப்பட்ட நாள் 2011-07-09.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் George Grosz' Interregnum
- Visions: sculptor Altina interviewed by Pam Peabody. Interview with Altina Schinasi and Joan Mister broadcast on WPFW, November 4, 1978.
- Altina Schinasi: the visionary artist who reshaped perception