அல்டேர்னி

அல்டேர்னி (பிரெஞ்சு: Aurigny; அரேக்னைஸ்: Aoeur'gny) ஆங்கிலக் கால்வாயில் உள்ளத் தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்துள்ள தீவாகும். ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய ஆட்சிப்பகுதியான இது குயெர்ன்சி பலிவிக்கின் ஒரு பகுதியாகும். இது 3 மைல் (5 கி.மீ.) நீளமும் 1.5 மைல் (2.5 கி.மீ) அகலமும் கொண்டது. மொத்தப் பரப்பளவு 3 சதுரமைல் (8 சதுர கிலோ மீட்டர்). இது ஆங்கிலக் கால்வாயில் உள்ளத் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவாகும். இது பிரானிசின் கொன்டென்டின் தீபகற்பத்தில் இருந்து மேற்காக 10 மைல் (16 கி.மீ.) தொலைவிலும் இங்கிலாந்தின் தென் முனையில் இருந்து 60 மைல் (97 கி.மீ.) தெற்காகவும் அமைந்துள்ளது.இத்தீவில் 2400 பேர் வசிக்கின்றார்கள். இங்கு புனித அன்னம்மாள் பங்கு அமைந்துள்ளது இது இத்தீவில் காணப்படும் ஒரே பங்காகும்.

அல்டேர்னி
LocationGuernsey.png
தலைநகரம்செயிண்ட். ஆன்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்
• அரச தலைவர்
சர் நோர்மன் புரொவ்ஸ்
குயெர்ன்சி பலிவிக்கின் ஒரு பகுதி
(ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய ஆட்சிப்பகுதி)
• நோர்மண்டி பெருநிலப்பரப்பிலிருந்து பிரிவு

1204
மக்கள் தொகை
• மதிப்பிடு
2,400
நாணயம்பவுண்டு1 (GBP)
நேர வலயம்கிறீன்விச் சீர் நேரம்
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1
இணையக் குறி.gg  (Guernsey)
  1. Local coinage is issued, including the pound note (see Alderney pound).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டேர்னி&oldid=3537780" இருந்து மீள்விக்கப்பட்டது