அல்தாப் பாத்திமா

அல்தாஃப் பாத்திமா ( Altaf Fatima ; 10 ஜூன் 1927 - 29 நவம்பர் 2018) ஒரு பாகிஸ்தானிய உருது புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளரும், ஆசிரியரும் ஆவார். இவர் முஹம்மது இக்பாலின் கவிதைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இலக்னோவில் பிறந்த இவர் பிரிவினையின் போது லாகூருக்கு குடிபெயர்ந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலையையும், இளங்கலை கல்வியியலையும் படித்தார். [1] இவரது புதிமான தஸ்தக் நா தோ ("தட்டாதே") உருது மொழியில் வரையறுக்கப்பட்ட படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதைத் தழுவி பாக்கித்தான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. கராச்சியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெரால்ட் மூலம் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், பாத்திமா 9வது கராச்சி இலக்கிய விழாவில் கேஎல்எஃப் உருது இலக்கிய விருதைப் பெற்றார். [2] இவர் 29 நவம்பர் 2018 அன்று இறந்தார்.

சான்றுகள்

தொகு
  1. "Contributor Altaf Fatima". Words Without Borders.
  2. "Live Updates from Karachi Literature Festival". https://www.samaa.tv/news/2018/02/live-updates-karachi-literature-festival/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்தாப்_பாத்திமா&oldid=3685134" இலிருந்து மீள்விக்கப்பட்டது