அல் அரீன் வனவிலங்கு பூங்கா

அல் அரீன் வனவிலங்கு பூங்கா (அரபு: محمية العرين ஆங்கிலம்: Al Areen Wildlife Park) பகுரைனின் தெற்கு ஆளுநரகப் பகுதியில் உள்ள சாக்கிர் பாலைவனப் பரப்பில் அமைந்துள்ள ஓர் இயற்கை காப்பகம் மற்றும் உயிரியல் பூங்காவாகும். நாட்டின் ஏனைய ஐந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அல் அரீன் வனவிலங்கு பூங்காவும் ஒன்றாகும். மற்றும் இதுவே பகுரைன் நாட்டின் , நிலப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள ஒரே பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் [1].

அல் அரீன் வனவிலங்கு பூங்கா
பூங்காவில் இருக்கும் செயற்கைக் குளம்
Map
26°00′56″N 50°29′44″E / 26.01556°N 50.49556°E / 26.01556; 50.49556
திறக்கப்பட்ட தேதி1976 (1976)
அமைவிடம்சாக்கிர், பகுரைன்
நிலப்பரப்பளவு7 சதுர கிலோமீட்டர்
ஆண்டு பார்வையாளர்கள்199,235 (2013 இல்)
வலைத்தளம்Al Areen Official Website

வரலாறும் சுருக்கக்குறிப்பும் தொகு

அல் அரீன் பூங்கா 1976 ஆம் ஆண்டு [2] 7 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. பகுரைனைத் தாயகமாகக் கொண்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஆபிரிக்கா, தெற்கு ஆசியா பகுதிகளிலில் தோன்றிய விலங்குகள் , தாவரங்கள் முதலானவை இவ்விலங்கியல் பூங்காவில் காணப்படுகின்றன. ஆண்டு முழுவதும் அல் அரீன் பூங்கா தினசரி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை திறக்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் மட்டும் 199,235 பார்வையாளர்கள் பூங்காவை பார்வையிட்டுச் சென்றுள்ளனர் [3][4]. 1999 வரை, இப் பூங்கா அமைச்சரவை அலுவல்கள் மற்றும் தகவல் அமைசகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

 
பூங்காவிற்குள் திசைகள்

பூங்காவின் சிறப்புகள் தொகு

பூங்காவில் 100,000 நடப்பட்ட தாவரங்கள் மற்றும் மரங்கள், 45 வகையான விலங்குகள். எண்பத்தி இரண்டுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் மற்றும் 25 வகையான தாவர இனங்ள் [5] உள்ளன. தற்பொழுது காடுகளில் காணாமல் போய்விட்ட ஆப்பிரிக்க மறிமான், பாரசீக வகை அழகிய மான், தாவிக் குதிக்கும் ஆப்பிரிக்க சுருள் மான், வேகமாக ஓடக்கூடிய சலுக்கி வகை வேட்டைநாய்கள் [6], இம்பாலா எனப்படும் ஆப்பிரிக்கச் சிறுமான், தரிசு மான், சேப்மேன் வகை வரிக்குதிரைகள் மற்றும் பாலைவன முயல்கள் [7] உள்ளிட்ட விலங்குகள் இங்கு காணப்படுகின்றன. அரேபிய இனமான கொடுவாள் கொம்பு மறிமான், காடுகளில் அரிதாகக் காணப்படும் ஆப்பிரிக்க மான், சகாராவுக்குரிய தாமா வனப்பு மான்கள், ஒட்டகச் சிவிங்கிகள், நுபியன் வகை பாலைவன ஆடு, மலை ஆடுகள், பார்பாரி வகை வடக்கு ஆப்பிரிக்க ஆடுகள், ஆசியக் காடுக் கழுதைகள் முதலிய அரிய விலங்கினங்களும் இங்கு உள்ளன.[8] பூங்காவில் மேலும் அருகிவரும் இனங்கள் கட்டுப்படுத்தப்பட்ட வளர்ப்பு முறைகளில் பெருக்கும் கொள்கையை மேற்கொண்டுள்ளது.[9].

அல் அரீன் வனவிலங்குப் பூங்கா மொத்தமாக 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 400 ஏக்கர்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இரு பிரிவுகளில் ஒரு பிரிவு பொது மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவு தாவரங்கள், விலங்குகளின் பாதுகாப்புக் காப்பிடத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது [10]. இப்பிரிவு தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்காக இரண்டு நீர்த்தேக்கங்கள் இப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன .

கடந்த பத்தாண்டுகளில் இப்பூங்கா பல்வேறு வகைகளில் புணரமைக்கப்பட்டுள்ளது. புதியாக ஒரு பறவைக் கூடும், அராபிய வன விலங்குகளுக்கான ஒர் இருப்பிட வளாகமும் உருவாக்கப்பட்டுள்ளன. பூங்காவில் வல்லூறு அரங்கம், ஒரு வீட்டு விலங்குப் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.[4]

பூங்காவிற்குள் நடைமுறைகள் தொகு

பிரதான நுழைவாயிலில் இருந்து பேருந்துகள் மூலமாக பூங்காவிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மூன்று முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு கட்டணமும் அதற்குக் குறைவான வயதுக் குழந்தைகளுக்கு இலவசமாகவும் அனுமதி கொடுக்கப்படுகிறது. பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைய பயணிகளுக்கு அனுமதியில்லை. ஆய்வாளர்கள், மருத்துவர்கள், விலங்குக் காப்பாளர்கள்ஆகியோருக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது [11]. முன் அனுமதி பெற்று பார்வையிட வசதியும் அளிக்கப்படுகிறது [7]. மனாமா நகரில் இருந்து 40 நிமிட பயணத்தொலைவில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு [5] பகுரைன் அனைத்துலக மோட்டார் பந்தய சுற்றுப்பாதைக்கு அருகில் இப்பூங்கா அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Towards a Bahrain National Report to the convention on Biological Diversity" (PDF). International Mountains Consultancy. Archived from the original (PDF) on 17 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. (Date of establishment mentioned) (17 May 2007). "ABD750,000 for Al Areen renovation". Gulf Daily News. http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=182402. பார்த்த நாள்: 28 June 2012. 
  3. "12/01/14". Archived from the original on 20 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Facelift for Al Areen". Gulf Daily News. 16 July 2011. http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=309909. பார்த்த நாள்: 28 June 2012. 
  5. 5.0 5.1 Walker, Jenny (2010). Oman, UAE & Arabian Peninsula. Lonely Planet. பக். 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1741791456. https://books.google.com/books?id=D8hmZIAaTGQC&pg=PA124. 
  6. "Saluki dogs at Al Areen Park". Gulf Daily News. 18 July 2007. http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=188092. பார்த்த நாள்: 28 June 2012. 
  7. 7.0 7.1 "Al Areen Wildlife Park". Bahrain WaterPark. Archived from the original on 28 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012.
  8. "Al Areen Wildlife Park and Reserve". GoMideast. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012.
  9. World Directory of Environmental Organizations. Earthscan. 1996. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:185383307X. https://books.google.com/books?id=STAM4cTZ9JkC&pg=PA130. 
  10. Kannan, A. (2011). Global Environmental Governance and Desertification: A Study of Gulf Cooperation Council Countries. Concept. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8180698483. https://books.google.com/books?id=OgCQuVTM_RcC&pg=PA272. 
  11. "About Al Areen - History". Archived from the original on 2016-11-10. பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.