அழிந்துபோன நாய் இனங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அழிந்துப்போன நாய் இனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அழிந்துபோன நாய் இனங்களின் பட்டியல்

தொகு
Name Image Notes
அலான்ட்   நடுக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான ஓடும்வகை வேட்டை நாய்கள் இவை.[1]
ஆல்பைன் மாசுதிப்பு   உரோமர்களால் அறிமுகப்பபடுத்தப்பட்டதாக நம்பப்படும் குறுகிய முடியுடைய நாய்களான இவை, நடுக்ககாலத்தில் பிரபலமாக இருந்த மாசுதிப்பு வகை நாய்களின் இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தன.[2]
அர்கெந்தீன பனி நாய்   1950களில் அர்கெந்தீன அரசால் அந்தாட்டிக்காவில் இழுநாய்களாக இவை பயன்படுத்தப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் கைவிடப்பட்டபோது, இந்நாயின வளர்ப்பும் கைவிடப்பட்டது.[3]
மாசுக்கோ புனல்நாய் மாசுக்கோவில் பயன்படுத்தப்பட்ட ஒரு மீன்பிடி நாயினம்.
பெல்கிய மாசுதிப்பு   கீழமை நாடுகளில் பணி விலங்காக பயன்படுத்தப்பட்ட இவ்வகை மாசுதிப்புகள் இருபதாம் நூற்றாண்டில் தேவையின்மை காரணமாக அழிந்து போனதாக கருதப்படுகின்றன.[4]
கறுப்பு மற்றும் பழுப்பு தெரியர்   பெரிய பிரித்தானியாவில் பிரபலமாக இருந்த இந்த தடித்ததோல் கொண்ட ஆங்கில நாயினம்
இக்கால தெரியர்களின் முன்னோடி. [5]
நீலபால் தெரியர் இசுக்காட்லாந்தில் இருந்த எருதுவகைத் தெரியரின் ஆங்கிலேய திரிபினமான இவ்வகை நாய்கள் நாய்ச்சண்டைக்காக பயன்பட்டன. நாய்ச்சண்டை நடத்துவது குற்றமென அறிவிக்கப்பட்டப்பின் இவ்வினம் அழிந்துபோனது.

[6]

பிராக்தூப்பி   பிரெஞ்சு வகை நாயினமான இது, இக்கால கிரே ஔன்டர் நாயினத்தின் முன்னோடியாக கருதப்பதுகின்றது. [7]
எருதுவகைத் தெரியர்   இவ்வகைத் தெரியர்கள் நாய்ச்சண்டைக்காக பயன்பட்டன. [8]
எருதுவகைப்பீசர்   செர்மனிய நாயினமான இவை, வேட்டைக்காக பயன்பட்டன. இவ்வகை நாயினம், இக்கால பாக்சர் நாயினத்தின் முன்னோடியாக கருதப்பதுகின்றது.[9]
சீன்கிரீசு   நடுக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பிரெஞ்சு வகை நாயினமான இது, அரசர் லூயிசு IXஆல் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.[10]
சிரிபயா நாய் தென்மேற்கு பெருவில் காணப்பட்ட மேய்ப்பு நாயினம் இது.[11][12]
கார்டோபா சண்டை நாய்   அர்கெந்தீனாவில் நாய்ச்சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட நாயினம்.[13][14]
அவாயன் போய்நாய்   ஐரோப்பிய இடம்பெயர்வுக்கு முன், அவாய் தீவுகளில் இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட நாயினம். காலப்போக்கில் ஐரோப்பிய உணவுகள் பிரபலமடைந்ததன் காரணத்தால் அழிந்து போனது. [15]
வடநாட்டு பீகில்   அளவான எடையுற்றிருந்த ஆங்கிலேய மோப்பநாய்.[16]
பழைய குரோவாசிய பார்வை ஔன்டு நடுக்ககாலத்தில் பந்தயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குரோவாசிய நாயினம்.[17]
தென் ஔன்டு   பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பிரபலமான ஆங்கில வேட்டை நாயினம். [18]
தால்பாட்டு நாய்   நடுக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட மோப்ப நாயினம். குற்றவாளிகளைப் பிடிக்க பயன்பட்டது. [19]
வெல்சு இல்மன் வேல்சைச் சேர்ந்த ஆங்கிலேய மேய்ப்பு நாயினம்.[20]

மேற்கோள்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Cummins (2001), ப. 14.
  2. Fogle (2009), ப. 257.
  3. Maida (2015).
  4. Morris (2001), ப. 666.
  5. Hancock (1984), ப. 13.
  6. Morris (2001), ப. 348-349.
  7. Morris (2001), ப. 255-257.
  8. Morris (2001), ப. 346.
  9. Fiorone (1973), ப. 89.
  10. Hörter (2014).
  11. Collyns, Dan (September 23, 2006). "Mummified dogs uncovered in Peru". BBC News (Lima). http://news.bbc.co.uk/2/hi/americas/5374748.stm. 
  12. Leonard, Jennifer A. (2002-11-22). "Ancient DNA evidence for Old World Origin of New World Dogs". Science 298 (5598): 1613–1616. doi:10.1126/science.1076980. பப்மெட்:12446908. Bibcode: 2002Sci...298.1613L. 
  13. Mulkeen, Verity (11 May 2009). "Amores Perros: Dog Fighting in Argentina". The Argentina Independent. Archived from the original on 2013-06-17.
  14. Larry Levin (2010). Oogy: The Dog Only a Family Could Love. Grand Central Publishing. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-446-57487-7.
  15. Wilcox & Walkowicz (1995), ப. 494-495.
  16. Hancock (2014b), ப. 62-64.
  17. Morris (2001), ப. 32.
  18. Alderton (2000), ப. 58-59.
  19. Alderton (2000), ப. 41 & 88.
  20. Hancock (2014a), ப. 11.

நூலியல்

தொகு