அழைப்பு (சிறுகதைத் தொகுப்பு)
கதை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அழைப்பு என்பது சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடாக இப்புத்தகம் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் 17 சிறுகதைகள் உள்ளன. இப்புத்தகத்தின் பதிப்புரிமை சுந்தர ராமசாமி அவர்களுடையது. இத்தொகுப்புகளிலுள்ள சிறுகதைகளில் ஒன்றான அழைப்பு எனபதுவே இத்தொகுப்பின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. இத்தொகுப்பிற்கு அரவிந்தன் முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
நூலாசிரியர் | சுந்தர ராமசாமி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | சிறுகதைத் தொகுப்பு |
வெளியீட்டாளர் | காலச்சுவடு பப்ளிகேஷன் |
பக்கங்கள் | 183 |
ISBN | 81-87477-58-X |
சுந்தர ராமசாமியின் கதைகள் அடுத்த கட்டத்தின் தொடக்கப்புள்ளி மட்டுமல்ல, அவரது எழுத்து ஆளுமையின்
பரிணாம வளர்ச்சியின் அழுத்தமான அடையாளமும் கூட. இந்த அடையாளம் அடுத்ததடுத்த கதைகளில் அழுத்தம் பெற்று வருவதைப் பார்க்க முடிகிறது. போதை, பல்லக்குத் தூக்கிகள், ரத்னாபாயின் ஆங்கிலம், பள்ளம், கொந்தளிப்பு, வழி, கோலம், எதிர்கொள்ளல், பட்டுவாடா, நெருக்கடி ஆகிய கதைகளில் இதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.
தொகுப்பிலுள்ள சிறுகதைகள்
தொகு- அழைப்பு
- போதை
- பல்லக்குத் தூக்கிகள்
- வாசனை
- அலைகள்
- ரத்னாபாயின் ஆங்கிலம்
- குரங்குகள்
- பள்ளம்
- கொந்தளிப்பு
- ஆத்மாராம் சோயித்ராம்
- மீறல்
- வழி
- கோலம்
- எதிர்கொள்ளல்
- காகங்கள்
- பட்டுவாடா
- நெருக்கடி
பின்னட்டைக் குறிப்புகள்
தொகுஇப்புத்தகத்தின் பின்னட்டையில் காணப்படும் குறிப்புகள்:
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 1970 முதல் 1977 வரை சுந்தர ராமசாமி எதுவும் எழுதாமல் இருந்திருக்கிறார். 'மோனத்துவம்' என்று சிலரால் வர்ணிக்கப்பட்ட இந்த இடைவெளிக்குப் பிறகு சு.ரா. எழுதிய கதைகள் முற்றிலும் புதிய தடத்தில் பயணிக்க ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் மொழி, உள்ளடக்கம், உத்தி, பார்வை ஆகியன சார்ந்து சு.ரா.வின் படைப்பாளுமையில் நிகழ்ந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கும் கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
வெளி இணைப்பு
தொகுரத்னாபாயின் ஆங்கிலம் பரணிடப்பட்டது 2013-08-31 at the வந்தவழி இயந்திரம்