அவசர போலீஸ் 100 (திரைப்படம்)

பாக்யராஜ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அவசரப் போலிஸ் 100 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அவசர போலீஸ் 100 என்ற திரைப்படம் பாக்யராஜ் இயக்கி நடித்த தமிழ்ப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் எம். ஜி. ஆர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வந்தார். 1990களில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில், 1977ல் எம். ஜி. ஆரை கதாநாயகனாக வைத்து சி வி சீறிதர் இயக்கிய அண்ணா நீ என் தெய்வம் படத்தின் ஏறக்குறைய 4000 அடி திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதற்கு தக்கவாறு பாக்யராஜ் கதைக்களம் அமைத்திருந்தார்.[1]

அவசர போலீஸ் 100
இயக்கம்பாக்யராஜ்
தயாரிப்புஎஸ். துரைசாமி
கதைபாக்யராஜ்
இசைம. சு. விசுவநாதன்
பாக்யராஜ்
நடிப்புபாக்யராஜ்
ம. கோ. இராமச்சந்திரன்
கௌதமி
சில்க் ஸ்மிதா
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுவி ராமமூர்த்தி
படத்தொகுப்புஏ பி மணிவண்ணன்
கலையகம்சுதா சினி மூவிஸ்
விநியோகம்சுதா சினி மூவிஸ்
வெளியீடு17 அக்டோபர் 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இரு பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். அத்துடன் ம. கோ. இராமச்சந்திரன் படத்தில் நடித்த மா. நா. நம்பியார், சங்கீதா (நடிகை) மற்றும் வி. எஸ். ராகவன் மற்றும் சிலர் புதிய திரைப்படத்திலும் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் 1994ல் இந்தியில் கோபி கிருஷ்ணா என்ற பெயரில் சுனில் ஷெட்டியால் எடுக்கப்பட்டது.

கதைச் சுருக்கம்

தொகு

கதைமாந்தர்கள்

தொகு
நடிகர் பாத்திரம்
பாக்யராஜ் ராமு/ வீரசாமி நாயுடு
ம. கோ. இராமச்சந்திரன் ராஜூ (Archive Footage)
கௌதமி ராமுவின் காதலி
சில்க் ஸ்மிதா ராமுவின் மனைவி
சங்கீதா ராஜூ / ராமுவின் அம்மா
மா. நா. நம்பியார் ராஜூ / ராமுவின் அப்பா
விஜயகுமார் நம்பியாரின் பங்குதாரர் / வில்லன்
கோவை செந்தில்[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Rangarajan, Malathi (21 January 2012). "Vettai: Brothers and the baddies". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161206034309/http://www.thehindu.com/features/cinema/vettai-brothers-and-the-baddies/article2820290.ece. 
  2. "Actor Kovai Senthil dies at 74". இந்தியா டுடே. 9 September 2018. Archived from the original on 27 October 2019. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.

வெளியிணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அவசர போலீஸ் 100