அவசர சிகிச்சைப் பயிற்றுநர்

பருத்துவத்தில் ஒரு பயிற்சிப் பாடம்

அவசர சிகிச்சைப் பயிற்றுநர் (Emergency care instructor) என்பவர் பொதுமக்கள் அல்லது இராணுவப் பணியாளர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிப்பவரைக் குறிக்கிறது. இத்தகுதி பெறுவதற்கு ஒரு நபர் இதற்குப் பொருத்தமான படிப்புகளை படித்து முடித்திருக்க வேண்டும். மேலும் கற்பிக்கப்படுபவர்களை விட அச்சான்றிதழின் நிலை பொதுவாக ஒரு நிலையாவது அதிகமாக இருக்க வேண்டும்.[1] பெரும்பாலும், இத்தகைய கவனிப்பை வழங்குவதில் அவர்களுக்கு அனுபவம் தேவைப்படுகிறது. இந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், விண்ணப்பதாரர் பயிற்சியை முடித்து, சாத்தியமான கூடுதல் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பிறகு சான்றிதழைப் பெறுவார்.

பொதுவாக சான்றிதழ் பெறும் போது மற்ற பயிற்றுவிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வகுப்புகளை இவர்கள் நடத்துவது அவசியம். அதன் பிறகுதான் ஒரு புதிய பயிற்றுவிப்பாளர் சொந்தமாக படிப்புகளை கற்பிக்க முடியும். தாங்கள் பெற்ற சான்றிதழை இவர்கள் அவ்வப்போது புதுப்பிக்கவும் வேண்டும். [2]

பல முதலுதவி மற்றும் மருத்துவப் படிப்புகள் உள்ளன. இவை பலவாறாக வேறுபடுகின்றன:

  • கவனிப்பு நிலை ( இதய நுரையீரல் புத்துயிர், இரத்தப்போக்குக்கான முதலுதவி, குழந்தைகளுக்கான உதவி போன்றவை. );
  • மாணவர்களின் குறைந்தபட்ச கல்வி / தொழில்முறை நிலை (முன் மருத்துவப் பயிற்சி இல்லாத நபர்கள், முதல் பதிலளிப்பவருக்கான தகுதி உள்ளவர்கள், வெவ்வேறு நிலைகளில் உள்ள அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் , செவிலியர்கள், மருத்துவர்கள் );
  • கவனிப்பு வழங்கப்படும் குறிப்பிட்ட சூழ்நிலைகள்: துரிதநிலை அவசர மருத்துவப் பயிற்சி, தந்திரோபாய மருத்துவப் பயிற்சி போன்றவை. போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்

மேற்கோள்கள் தொகு

  1. www.naemt.org பரணிடப்பட்டது 2017-08-10 at the வந்தவழி இயந்திரம் Become a NAEMT instructor.
  2. Emergency First Response Instructor Course