அவதார்: தி வே ஆப் வாட்டர்

அவதார்: தி வே ஆப் வாட்டர் (Avatar: The Way of Water) என்பது 2022 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க நாட்டு காவிய அறிபுனைத் திரைப்படம் ஆகும். இது 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் என்ற படத்தின் தொடர்சியாக லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் மற்றும் டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, 20ஆம் சென்சுரி பாக்ஸ்[4] நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

அவதார்: தி வே ஆப் வாட்டர்
இயக்கம்ஜேம்ஸ் கேமரூன்
தயாரிப்பு
திரைக்கதை
  • ஜேம்ஸ் கேமரூன்
  • ஜோஷ் பீரீட்மேன்
இசைசைமன் பிராங்லென்
நடிப்பு
ஒளிப்பதிவுரசல் கார்பெண்டர்
படத்தொகுப்பு
  • டேவிட் பிரென்னர்
  • ஜேம்ஸ் கேமரூன்
  • ஜான் ரெபோவா
  • இசுடீபன் ஈ. ரிவ்கின்
கலையகம்லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட்
டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுதிசம்பர் 16, 2022 (2022-12-16)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$350 மில்லியன்[1]
மொத்த வருவாய்$2.26 பில்லியன்[2][3]

இந்த திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் இணைந்து ஜான் இலாண்டாவ் என்பவரும் தயாரிக்க, ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஜோஷ் பீரீட்மேன் ஆகியோரின் திரைக்கதையில்,[5][6][7][8] சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா, சிகர்னி வேவர், இசுடீபன் லாங், கிளிப் கர்டிசு, சிசிஎச் பவுண்டர், எடி பால்கோ, ஜெமைன் கிளமென்ட் மற்றும் கேட் வின்ஸ்லெட் போன்ற பலர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கேமரூன் என்பவர் அவதார் படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சிகளை உருவாக்க விரும்புவதாக 2006 இல் கூறியிருந்தார். முதல் படத்தின் பரவலான வெற்றியைத் தொடர்ந்து 2010 இல் முதல் இரண்டு தொடர்ச்சிகளை அறிவித்தார், அதை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் இதன் தொடர்ச்சியை வெளியிடும் நோக்கத்தில் இருந்தார்.[9][10] இருப்பினும், நீருக்கடியில் காட்சிகளைப் படம்பிடிப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் இருப்பதனால், இதற்கு முன்பு செய்யப்படாத ஒரு சாதனை, படக்குழுவினர் அதிக நேரம் வேலை செய்வதற்கு குறிப்பிடத்தக்க தாமதத்திற்கு வழிவகுத்தது.[11] இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 15, 2017 அன்று கலிபோர்னியாவின் மன்ஹாட்டன் கடற்கரையில் தொடங்கியது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 25, 2017 அன்று நியூசிலாந்தில் அவதார் 3 உடன் ஒரே நேரத்தில் முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது. இருப்பினும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக தயாரிப்பு தடைபட்ட போதிலும், படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 2020 இன் இறுதியில் முடிவடைந்தது.

இப் படத்தின் திரையரங்கு வெளியீடு மீண்டும் மீண்டும் தாமதத்திற்கு உட்பட்டது, சமீபத்தியது ஜூலை 23, 2020 அன்று நிகழும் என அறிவிக்கப்பட்டு,[12] இது தற்போது திசம்பர் 16, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, பின்வரும் மூன்று தொடர்ச்சிகள் முறையே டிசம்பர் 20, 2024, திசம்பர் 18, 2026 மற்றும் திசம்பர் 22, 2028 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[13][14]

மேற்கோள்கள்

தொகு
  1. Cabin, Chris (September 30, 2017). "The 'Avatar' Sequels "Will Be the Most Expensive Movies of All Time," According to Fox" இம் மூலத்தில் இருந்து October 3, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003040229/https://collider.com/avatar-sequels-budget/. 
  2. "Avatar: The Way of Water". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் December 23, 2022. 
  3. "Avatar: The Way of Water". த நம்பர்சு. நேஷ் இன்பர்மேசன் சர்விசசு, எல்.எல்.சி. பார்க்கப்பட்ட நாள் December 23, 2022.
  4. Mahajan, Viraj (September 24, 2019). "Too much pressure on James Cameron for Avatar 2 after Avengers: Endgame?". International Business Times. Archived from the original on September 27, 2019. பார்க்கப்பட்ட நாள் January 17, 2020.
  5. Fleming, Mike Jr. (August 1, 2013). "'Avatar' Sequels Upped To Three; Fox, James Cameron Set Trio of Writers to Spearhead". Deadline Hollywood. Archived from the original on August 22, 2014. பார்க்கப்பட்ட நாள் September 25, 2017.
  6. Vijay, Amar (November 26, 2014). "James Cameron Talks Avatar Sequels". Empire இம் மூலத்தில் இருந்து October 5, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151005074816/http://www.empireonline.com/news/story.asp?NID=42852. 
  7. Medina, Joseph (November 28, 2014). "James Cameron Opens Up About 'Avatar' Sequels". Inquisitr இம் மூலத்தில் இருந்து October 22, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191022110225/https://www.inquisitr.com/1641105/james-cameron-opens-up-about-avatar-sequels/. 
  8. Fleming, Mike Jr. (October 22, 2013). "James Cameron Has Found Avatar's Darth Vader: It's Stephen Lang". Deadline Hollywood. Archived from the original on October 26, 2013. பார்க்கப்பட்ட நாள் April 27, 2022.
  9. Carroll, Larry (June 29, 2006). "'Titanic' Mastermind James Cameron's King-Size Comeback: Two Sci-Fi Trilogies". MTV இம் மூலத்தில் இருந்து July 5, 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060705002024/http://www.mtv.com/movies/news/articles/1535402/06292006/story.jhtml. 
  10. Rosenberg, Adam (January 8, 2010). "'Avatar' Sequel Confirmed By James Cameron... And Here's What We'd Like To See". MTV இம் மூலத்தில் இருந்து January 16, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100116070131/http://moviesblog.mtv.com/2010/01/08/avatar-sequel-confirmed-by-james-cameron-and-heres-what-wed-like-to-see/. 
  11. McClintock, Pamela (October 27, 2010). "James Cameron's 5-year plan". Variety இம் மூலத்தில் இருந்து January 12, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110112213444/http://www.variety.com/article/VR1118026416. 
  12. White, Adam (July 23, 2020). "Avatar 2 delayed indefinitely due to coronavirus, confirms James Cameron" (in en). The Independent இம் மூலத்தில் இருந்து January 28, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210128122109/https://www.independent.co.uk/arts-entertainment/films/news/avatar-2-sequel-delay-release-james-cameron-french-dispatch-mulan-star-wars-a9635431.html. 
  13. Mendelson, Scott (July 25, 2020). "Box Office: 'Avatar 2' Delay Means Universal's 'F9' And 'Jurassic World: Dominion' Could Rule 2021". Forbes. Archived from the original on July 25, 2020. பார்க்கப்பட்ட நாள் July 28, 2020.
  14. Reimann, Tom (July 23, 2020). "The 'Avatar' Sequels Have Been Delayed Again, So I Guess Things Are Returning to Normal" இம் மூலத்தில் இருந்து July 24, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200724014757/https://collider.com/avatar-sequels-new-release-dates-delayed/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவதார்:_தி_வே_ஆப்_வாட்டர்&oldid=3834242" இலிருந்து மீள்விக்கப்பட்டது