அவந்திசுவாமி கோயில்

அவந்திசுவாமி கோயில் ( Avantiswami Temple ) என்பது இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அவந்திபோராவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் கோவிலாகும். இங்கு சிவ பெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் என தலா இரண்டு கோயில்கள் இருந்தன. பொது ஊழி 9 ஆம் நூற்றாண்டில் ஜீலம் ஆற்றங்கரையில் உத்பால வம்சத்தின் மன்னன் அவந்திவர்மனால் இந்த கோயில்கள் கட்டப்பட்டன. கோயில்கள் பூகம்பங்களால் அழிக்கப்பட்டன. தற்போது இந்த இடத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது.[1]

வரலாறு

தொகு

அழகியலாக கட்டப்பட்ட இக்கோயில் கி.பி 853-855 ஆம் ஆண்டில் காஷ்மீரை ஆண்ட அவந்திவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. முதலில் விஸ்வாசரா என்று அழைக்கப்பட்டது. அப்போது தலைநகராக இருந்த பண்டைய நகரம் அவந்திவர்மன் என்ற உத்பால மன்னனால் நிறுவப்பட்டது. அவந்திவர்மன் தனது ஆட்சிக் காலத்தில் இந்த பிராந்தியத்தில் பல பெரிய இந்துக் கோவில்களைக் கட்டியிருந்தான். அவற்றில் இசுலாமியப் படையெடுப்பாளர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அழிக்கப்பட்டது போக சில மட்டுமே இன்று மீதமுள்ளன. அவனது ஆட்சிக் காலத்தில், இப்பகுதி செழித்திருந்தது. காஷ்மீரின் கோயில்கள் காஷ்மீரில் உள்ள பல பழங்கால கோயில்களிலிருந்தும் இந்தியாவின் பிற இடங்களிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.

கோயில்கள்

தொகு

இசுலாமிய படையெடுப்புகளுக்கு முன்னர் காஷ்மீர் சைவ சமயத்துக்கும் மெய்யியலின் மையமாகவும், சமசுகிருதக் கற்றல் மற்றும் இலக்கியத்தின் ஒரு இடமாகவும் இருந்தது. 14ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் இசுலாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அதன் ஆரம்பகால கோயில்களில் பெரும்பாலானவை 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடிக்கப்பட்டது அல்லது அகற்றப்பட்டன. அவந்திவர்மன், அவந்திபூர் மற்றும் சுய்யாபூர் நகரங்களை நிறுவினான். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில்களையும் புத்த விகாரகங்களையும் கட்டினான்.  அவந்திபூரில் முறையே சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவந்தீசுவர் மற்றும் அவந்திசுவாமி கோயில்கள் இவன் கட்டியக் கோயில்களில் குறிப்பிடத்தக்கவை. அவந்திசுவாமி அளவு சிறியது, ஆனால் மார்தாண்ட சூரியன் கோயிலுக்கு ஒத்ததாக இருந்தது.[2][3] இவை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Avantiswami Temple, Avantipur". Archeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  2. "Lost in the rubble". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 12 July 2013.
  3. "Kashmir. General view of ruins of Temple of Avantiswami at Avantipore. Probable date A.D. 852 to 854". British Library. பார்க்கப்பட்ட நாள் 26 March 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவந்திசுவாமி_கோயில்&oldid=3741970" இலிருந்து மீள்விக்கப்பட்டது