அவளும் நானும் (தொலைக்காட்சித் தொடர்)

அவளும் நானும் என்பது விஜய் தொலைக்காட்சியில் 26 பெப்ரவரி 2018 முதல் 22 ஜூன் 2019 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடர் அசாமிய மொழி தொடரான 'அர்தங்கினி' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

அவளும் நானும்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துகுமரன்
இயக்கம்தனுஷ்
நடிப்பு
  • மௌனிகா தேவி
  • அம்ருத்
  • தரிஷ்
  • ஸ்ரீ மஹாதேவ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்380
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்26 பெப்ரவரி 2018 (2018-02-26) –
22 சூன் 2019 (2019-06-22)

இந்தத் தொடரை இயக்குநர் தனுஷ் இயக்க, நடிகை மௌனிகா இந்தத் தொடரில் இரட்டைச் சகோதரிகளாக நிலா மற்றும் தியாவாக நடித்துள்ளார்,[1] இதுவே இவரின் முதல் தொலைக்காட்சித் தொடரும் ஆகும். இந்த தொடரில் நாயகனாக அம்ருத் மற்றும் ஸ்ரீ மஹாதேவ் நடித்துள்ளார்கள், இவர்களுடன் தரிஷ், கண்ணன், ஸ்ரீ லதா, ஷியாம் கோபால் ஆகியோரும் நடித்து உள்ளார்கள்.[2][3][4][5][6] இந்தத் தொடர் 22 சூன் 2019 அன்று 280 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்

தொகு

இரட்டைச் சகோதரிகளான நிலா மற்றும் தியா பணக்கார வீட்டுப் பையனான பிரவீனுடன் நிலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், நிலாவோ விஜய் என்ற பையனைக் காதலிக்கிறார். ஆனால், பெற்றோரிடம் சம்மதம் கிடைக்கவில்லை.

எனவே, திருமணத்துக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போகிறார் நிலா. குடும்பப் பெயரைக் காப்பாற்றுவதற்காக, தியாவை நிலா என்று சொல்லி பிரவீனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பெற்றோரை விட்டுப் பிரிந்து காதலனுடன் சென்ற நிலாவின் கணவன் ஒரு விபத்தில் இறக்கின்றான். இதன் பிறகு நிலா பெயரில் செல்லும் தியாவின் வாழ்க்கை என்னவாகப் போகிறது? என்பதுதான் கதை.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
  • மௌனிகா தேவி - தியா பிரவீன் / நிலா விஜய்
  • அம்ருத் - பிரவீன்
  • ஸ்ரீ மஹாதேவ் - விஜய் (பகுதி: 1-34)
  • தரிஷ் - அரவிந்த்
  • தினேஷ் சிவா - ஷாம்

தியா / நிலா குடும்பத்தினர்

தொகு
  • கண்ணன் - சத்யமூர்த்தி
  • ஸ்ரீ லதா - காயத்ரி சத்யமூர்த்தி

பிரவீன் குடும்பத்தினர்

தொகு
  • ஷியாம் கோபால் - ராஜேந்திரன்
  • கிரு பாஜி - பார்வதி ராஜேந்திரன்
  • ரேஷ்மா ரெசு - சுவேதா (பிரவினின் அக்கா)
  • தர்ஷ குப்தா - மானசா
  • சந்தோஷ் - தினேஷ்

துணை கதாபாத்திரம்

தொகு
  • கவிதா சோலைராஜன் -கவிதா பிரபாகர்
  • நீலகண்டன் - பிரபாகர்
  • சத்யப்ரியா - பானுமதி
  • சஞ்சய் சரவணன் - வசந்த்
  • குரு ஹாவ்க்மன் - ரவி சங்கர்
  • பானு பாரதிவாஜ் - மாதவி ரவி சங்கர்
  • பாலசுப்பிரமணி

நேரம் மாற்றம்

தொகு

இந்தத் தொடர் முதல் முதலில் விஜய் மேட்னி தொடர்கள் என்ற பெயரின் கீழ் 26 பெப்ரவரி 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. புதிய இதிகாசத் தொடரான ராதா கிருஷ்ணா என்ற தொடருக்காக, டிசம்பர் 3 ஆம் திகதி முதல் மதியம் 12:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. பின்னர் ஜனவரி 7, 2019 முதல் பழைய நேரமான 1:30 மணிக்கு ஒளிபரப்பானது.

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "'அவளும் நானும்', இரட்டை சகோதரிகளின் கதை". www.screen4screen.com. Archived from the original on 2018-03-18. பார்க்கப்பட்ட நாள் 2018-03-15.
  2. "Vijay TV to air new series- Avalum Nanum" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
  3. "விஜய் டிவியின் புதிய சீரியல் 'அவளும் நானும்'". www.ietamil.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
  4. "Vijay TV will launch a one-hour afternoon slot" (in ஆங்கிலம்). bestmediainfo.com. Archived from the original on 2018-02-24. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
  5. "விஜய் மேட்னி தொடர்- அவளும் நானும்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
  6. "Avalum Naanum gets a unique twist" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-18.

வெளி இணைப்புகள்

தொகு


விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மதியம் 1:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அவளும் நானும்
(7 ஜனவரி 2019 - 22 சூன் 2019)
அடுத்த நிகழ்ச்சி
ராதா கிருஷ்ணா
(3 திசம்பர் 2018 - 5 ஜனவரி 2019)
பொண்ணுக்கு தங்க மனசு
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மதியம் 12:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அவளும் நானும்
(3 திசம்பர் 2018 - 5 ஜனவரி 2019)
அடுத்த நிகழ்ச்சி
- ராதா கிருஷ்ணா
(7 ஜனவரி 2019 - 2 ஜூலை 2019)
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மதியம் 1:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அவளும் நானும்
(26 பெப்ரவரி 2018 - 1 திசம்பர் 2018)
அடுத்த நிகழ்ச்சி
- ராதா கிருஷ்ணா
(3 திசம்பர் 2018 - 5 ஜனவரி 2019)