அவிசாய் தெக்கல்

அவிசாய் தெக்கல் (Avishai Dekel)(பிறப்பு 1951) ஜெருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார் - இசுரேல் கோட்பாட்டு இயற்பியலின் ஆந்திரே ஐசன்சுட்டாட் இருக்கையை வைத்திருக்கிறார். அவரது முதன்மை ஆராய்ச்சி ஆர்வங்கள் வானியற்பியலிலும் அண்டவியலிலும் உள்ளன.

அவிசாய் தெக்கல்
பிறப்பு13 சனவரி 1951 Edit on Wikidata (அகவை 73)
எருசலேம் Edit on Wikidata
படித்த இடங்கள்எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் Edit on Wikidata
பணிகருத்தியற்பியலாளர், வானியற்பியலாளர், cosmologist edit on wikidata
இணையம்http://www.phys.huji.ac.il/~dekel Edit on Wikidata
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்அண்டவியல், வானியற்பியல்
நிறுவனங்கள்
அண்ட வலையில் இருந்து குளிர் நீரோடைகள் தொடக்க காலப் அணடத்துப் பால்வெளிக்கு ஊட்டம் தரல். ஒரு பாய்ம அண்டவியல் கணினி உருவகப்படுத்தல் (தெக்கல் மற்றும் பலர்) இப்படம் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அரை மில்லியன் ஒலியாண்டுகளுக்குப் பரவியுள்ள வளிம அடர்த்தியைக் காட்டுகிறது.
தொடக்க கால அண்டத்தில் ஒரு வட்டுப் பால்வெளியின் கொந்தளிப்பான ஈர்ப்பு நிலைப்பின்மை. ஒரு பாய்ம அண்டவியல் கணினி உருவகப்படுத்தல் (தெக்கல் மற்றும் பலர், 2011) இந்த வளிம அடர்த்திப் படம் வட்டு விண்மீன்கள் உருவாகும் மாபெரும் கொத்துக்களாக துண்டிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. வட்டத்தின் ஆரம் 30,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.

கல்வி வாழ்க்கை

தொகு

தெக்கல் தனது முனைவர் பட்டத்தை 1980 இல் எபிரேயப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். 1986 இல் புல ஆசிரியராக இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பு, கால்டெக்கில் ஆராய்ச்சியாளராகவும் , யேல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் இருந்தார்.

இவர் இராகா இயற்பியல் நிறுவனத்தின் தலைவராகவும் (1997 - 2001) எபிரேய பல்கலைக்கழகத்தில் சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அதிகாரத்தின் புல முதல்வ்ராகவும் (2005 - 2011) இசுரேல் இயற்பியல் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார் (2008 - 2011). இப்பல்கலைக்கழகக் கணக்கீட்டுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய இவர் அறங்காவலர் குழுவின் ஆட்சிக் குழுவில் உறுப்பினராகவும் இப்பல்கலைக்கழகத்தின் நிலைக்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

தெக்கலுக்கு யு. சி. பெர்க்லியில் வருகைதரு மில்லர் பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. பிளைசு பாசுக்கல் ஆராய்ச்சிக் கட்டில் பாரிசில் உள்ள எகோல் நார்மல் சூப்பரியூரால் (2004 - 06) வழங்கப்பட்டது. IAP பாரிசு (2015 - 16) இலாக்ரேஞ்சு ஆய்வுநல்கை வழங்கப்பட்டது.[1] அவர் இஸ்ரேல் இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (2019).ஈவருக்கு கலை, அறிவியலுக்கான இலாண்டாவ் பரிசும் (2020) வழங்கப்பட்டது.

அண்டவியல் ஆராய்ச்சியில் தனது பங்களிப்புகளுக்காக தெக்கல் அறியப்படுகிறார் , குறிப்பாக, பிரபஞ்சத்தில் இருண்ட ஆற்றல், இருண்ட பொருள் ஆட்சி செலுத்தும் பால்வெளிக்கல்கள், பேரியல் அமைப்பு உருவாக்கம் பற்றிய ஆய்வு.[2][3] குறலிப் பால்வெளிகள், மீவிண்மீன் வெடிப்புப் பின்னூட்டங்கள் (1986 - 2003) பேரியல் அண்டப் பாய்வுகள், அடிப்படை அண்டவியல் அளவுருக்களின் தொடக்க கால மதிப்பீடுகள் (1989 - 2001) ஆகியவற்றில் அவரது புலமை அமைகிறது.[4][5][6]

இவரது ஆராய்ச்சி பகுப்பாய்வு படிமங்களையும் கணினி உருவகப்படுத்தல்களையும் பயன்படுத்தி தொடக்கநிலை அண்டத்தில், அதன் மிகவும் சுறுசுறுப்பான பால்வெளி கட்டத்தில்,பால்வெள் உருவாக்கம் மீது கவனம் செலுத்துகிறது. அண்ட வலையில் இருந்தான குளிர்ந்த வளிமத்தின் தொடர்ச்சியான ஓடைகளும் இணையும் பால்வெளிகளும் எவ்வாறு விண்மீன்களை உருவாக்கும் வட்டுகளுக்கு வழிவகுக்கிறது என்றும் கொந்தளிப்புமிக்க ஈர்ப்பு வட்டு நிலைப்பின்மையை இயக்குகிறது என்றும் இந்த நிலைப்பின்மை எவ்வாறு மையப் பெரிய கருந்துளைகளுடன் கூடிய திரண்ட கோளப் பால்வெளிக் கூறுகளை உருவாக்குகிறது என்பதையும் இவர்அவர் ஆய்வு செய்கிறார்.

தெக்கல் 45,000 மேற்கோள்களும் 106 எச் - குறியீடுகளும் பெற்ற இசுரேலில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட வானியற்பியலாளர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Miller Institute - Visiting Professorship list". miller.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.
  2. Alan P. Lightman (1993), Ancient Light: Our Changing View of the Universe, Harvard University Press, p. 134, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03363-4
  3. M. S. Longair (2006), The cosmic century: a history of astrophysics and cosmology, Cambridge University Press, p. 360, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-47436-8
  4. "More evidence for the accelerating universe", Physics World, Institute of Physics, 17 September 1999, பார்க்கப்பட்ட நாள் 12 December 2012
  5. Eric Hand (1 April 2009), "Early galaxies surprise with size", Nature News, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/news.2009.225 {{citation}}: Missing or empty |url= (help)
  6. Rachel Courtland (21 January 2009), "Dark matter filaments stoked star birth in early galaxies", New Scientist, பார்க்கப்பட்ட நாள் 12 December 2012

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிசாய்_தெக்கல்&oldid=3931426" இலிருந்து மீள்விக்கப்பட்டது