அவிஜித் ராய்

அவிஜித் ராய் (ஆங்கிலம்: Avijit Roy, வங்காள மொழி: অভিজিৎ রায়, இறப்பு, 26, 2015) அமெரிக்காவில் வசித்த வங்காளதேசத்தைச் சார்ந்த பொறியாளர் ஆவார். இவர் விமரிசகர் மற்றும் கட்டுரையாளருமாவார். பிப்ரவரி 26, 2015 அன்று கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.[1] பகுத்தறிவு மற்றும் இறைமறுப்புக் கொள்கையுடைய இவர் தனது முக்தோ மோனோ (Mukto-Mona) எனும் இணையத்தளத்திற்காகப் பரவலாக அறியப்பட்டார்.

அவிஜித் ராய்
இறப்புபிப்ரவரி 26, 2015
வங்காளதேசம்
தொழில்விமரிசகர், கட்டுரையாளர் மற்றும் பொறியாளர்
மொழிவங்காள மொழி மற்றும் ஆங்கிலம்
தேசியம்அமெரிக்கர் மற்றும் வங்காளதேசி
இணையதளம்
http://www.mukto-mona.com/

கொலை மிரட்டல் தொகு

அவிஜித் ராய் வங்காளதேசத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளரான அஜோய் ராய் எனும் தாக்கா பல்கலைக்கழகப் பேரசிரியரின் மகனாவார்.[2] இவருக்கு வங்காளதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.[3][4]

படைப்புகள் தொகு

இவர் மொத்தம் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய பல கட்டுரைகள் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது கடைசி இரண்டு புத்தகங்களான த பிலாசஃபி ஆஃப் டிஸ்பிலீவ் (The Philosophy of Disbelief) மற்றும் த வைரஸ் ஆஃப் பெயித் (The Virus of Faith) ஆகிய புத்தகங்கள் சர்ச்சைக்குள்ளாகி பரவலான கவனத்தைப் பெற்றன.

மரணம் தொகு

வங்காளதேசத்தில் நடைபெற்ற எக்குஷே புத்தகக் கண்காட்சிக்கு (Ekushe Book Fair) வந்திருந்தபோது 26, பிப்ரவரி 2015 அன்று கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Assailants hack to death writer Avijit Roy, wife injured". bdnews24.com (Dhaka). 26 February 2015. http://bdnews24.com/bangladesh/2015/02/26/assailants-hack-to-death-writer-avijit-roy-wife-injured. பார்த்த நாள்: 26 February 2015. 
  2. http://newagebd.net/98434/blogger-avijit-hacked-to-death-on-du-campus/#sthash.Vp1lYqIQ.dpbs%7Ctitle=Blogger Avijit hacked to death on DU campus|date=26 February 2015|work=New Age|accessdate=26 February 2015|location=Dhaka}}
  3. "Bangladesh online bookstore drops author after death threats". ucanews.com. 18 Mar 2014.
  4. "Radical lslamists threaten Bangladeshi American Writer Avijit Roy". Policy Research Group Strategic Insight. 6 Apr 2014. Archived from the original on 21 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிஜித்_ராய்&oldid=3541975" இலிருந்து மீள்விக்கப்பட்டது