அவிநாசி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் 31 கிராம ஊராட்சிகள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அவிநாசி நகரத்தில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,43,604 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 35,030 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 135 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. ஆலாத்தூர்
  2. அய்யம்பாளையம்
  3. சேவூர்
  4. கணியாம்பூண்டி
  5. கானூர்
  6. கருமாபாளையம்
  7. கருவலூர்
  8. குப்பண்டம்பாளையம்
  9. குட்டகம்
  10. எம் எஸ் வி பாளையம்
  11. முரியாண்டம்பாளையம்
  12. நடுவச்சேரி
  13. நம்பியாம்பாளையம்
  14. புனசெய் தாமரைக்குளம்
  15. பாலாங்கரை
  16. பாப்பான்குளம்
  17. பொங்கலூர்
  18. போத்தம்பாளையம்
  19. புதுப்பாளையம்
  20. புலிப்பாறு
  21. இராமநாதபுரம்
  22. செம்பியநல்லூர்
  23. சின்னேரிப்பாளையம்
  24. தண்டுக்காரன்பாளையம்
  25. தத்தனூர்
  26. தெக்கலூர்
  27. துலுக்கமுத்தூர்
  28. உப்பிலிபாளையம்
  29. வடுகபாளையம்
  30. வேலாயுதம்பாளையம்
  31. வேட்டுவபாளையம்

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தை பிரிக்கும் திட்டம்

தொகு

அவிநாசி ஒன்றியத்தின் 31 ஊராட்சிகளையும் நிர்வகிப்பதில் தொய்வு ஏற்படுவதால், அவிநாசி ஒன்றியத்தின் வடக்கு பகுதிகளின் 16 கிராம ஊராட்சிகளைக் கொண்டு சேவூர் ஊராட்சி ஒன்றியம் புதிதாக நிறுவ அரசுக்கு அவிநாசி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பியுள்ளது. [3]

இத்தீர்மானத்தை அரசு ஏற்று நடைமுறைப்படுத்தினால், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் சின்னேரிபாளையம், கணியாம்பூண்டி, கருமாபாளையம், கருவலூர், குப்பாண்டம்பாளையம், நம்பியாம்பாளையம், பழங்கரை, புதுப்பாளையம், செம்பியநல்லுார், உப்பிலிபாளையம், வேலாயுதம்பாளையம், தெக்கலுார், துலுக்கமுத்துார், ராமநாதபுரம், அய்யம்பாளையம், நடுவச்சேரி மற்றும் வேட்டுவபாளையம் என 15 கிராம ஊராட்சிகள் செயல்படும்.

புதிதாக நிறுவப்படும் சேவூர் ஊராட்சி ஒன்றியத்தில் தத்தனுார், புஞ்சை தாமரைக்குளம், பாப்பாங்குளம், சேவூர், வடுகபாளையம், பொங்கலூர், ஆலத்தூர், மங்கரசவலைய பாளையம், குட்டகம், புலிப்பார், போத்தம்பாளையம், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன்பாளையம் மற்றும் கானுார் ஆகிய 16 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும். .

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions
  3. அவிநாசி ஒன்றியத்தை , இரண்டாக பிரிப்பது... தொடர் நடவடிக்கை