அவையகம்
தொல்காப்பியம் வாகைத்திணையை விளக்கும்போது நாலிரு வழக்கில் தாபதப் பக்கம் [1] என்று சுட்டி, அதனை மேலும் விளக்குகையில் எட்டுவகை நுதலிய அவையகம் [2] எனக் குறிப்பிடுகிறது.
- இவை 8 வகையான அவையகம்
இதற்கு உரை எழுதும் இளம்பூரணர் பிறப்பொழுக்கம், கல்வி, பொது-ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, அவா-இன்மை என்னும் 8 நெறிகளைக் குறிப்பிடுகிறார். [3]
இவற்றில் பொது-ஒழுக்கத்துக்குத் திருக்குறளிலிருந்து மேற்கோள்களையும் இளம்பூரணர் காட்டியுள்ளார்.
அரசன் வைத்திருந்த எண்பேராயம் வேறு.
இது மக்களைச் சூழ்ந்திருக்கும் எண்பேராயம்.
காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ தொல்காப்பியம் புறத்திணையியல் 16
- ↑ தொல்காப்பியம் புறத்திணையியல் 17
- ↑ இதற்கு மேற்கோளாக ஒரு பாடலையும் தருகிறார்.
குடிப்பிறப்பு உடுத்துப்(1) பனுவல் சூடி(2)
விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு(3) காமுற
வாய்மை வாய்மடுத்து மாந்தித்(4) தூய்மையின்
காதல் இன்பத்துள் தங்கித்(5) தீதறு
நடுவுநிலைமை நெடுநகர் வைகி(6) வைகலும்
அழுக்காறு-இன்மை(7) அவா-இன்மை(8) என
இருபெரு நிதியமும் ஒலுதான் ஈட்டும்
தோலா நாவின் மேலோர் பேரவை
உடன் அமர் இருக்கை ஒருநாள் பெறும் எனின்
பெறுக தில் அம்ம யாமே (...)
மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே. (ஆசிரியமாலை)