எண்பேராயம்

எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது. இது வாகைத் திணையின் முப்பது துறைகளில் ஒன்று.[1]

தமிழ்நாட்டு மன்னர்கள் நல்லாட்சி புரிய உதவியாக இருந்தவர்களை ஐம்பெருங்குழு என்றும், எண்பேராயம் என்றும் பகுத்துக் காட்டுவது வழக்கம். மதுரைக்காஞ்சி என்னும் நூல் நாற்பெருங்குழு என்று ஒன்றினைக் குறிப்பிடுகிறது.

  1. கரணத்தின் திரள்கள்
  2. வாய்க்கடை காப்போர்
  3. நகரி மாக்கள்
  4. படைத்தலைவர்
  5. கிளைச்சுற்றம்
  6. யானை ஊர்வோர்
  7. குதிரை ஊர்வோர்
  8. காவிதியர்

ஆகியோர் அந்த ஆயத்தில் இடம்பெற்றிருந்ததாக நிகண்டுநூல் குறிப்பிடுகிறது.[2]

இவர்களை நாம் முறையே

  1. செயலாளர்கள்
  2. காப்பாளர்கள்
  3. ஊர்ப்பெருமக்கள்
  4. படைத்தலைவர்கள்
  5. அணுக்கத் தொண்டர்கள்
  6. யானை வீரர்கள்
  7. குதிரை வீரர்கள்
  8. உழவர் பெருமக்கள்

என உணர்ந்துகொள்ளலாம்.

சேரன் அரசவை

தொகு

சேரன் செங்குட்டுவன் அவையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[3]

காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. தொல்காப்பியம் புறத்திணையியல் 17
  2. சூடாமணி நிகண்டு - 12 பல்பொருள் கூட்டத் தொகுபெயர்த் தொகுதி 64
  3. ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும், ... ‘மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க!’ என, - சிலப்பதிகாரம் கால்கோள் காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்பேராயம்&oldid=3299529" இலிருந்து மீள்விக்கப்பட்டது