வாகைத் திணை
தொல்காப்பியம் பொருள் | |
---|---|
அகத்திணை 7 அதன் புறன் ஆன புறத்திணை 7 | |
குறிஞ்சி | வெட்சி |
முல்லை | வஞ்சி |
மருதம் | உழிஞை |
நெய்தல் | தும்பை |
பாலை | வாகை |
கைக்கிளை | பாடாண் |
பெருந்திணை | காஞ்சி |
வாகைத் திணை என்பது தொல்காப்பியக் கருத்துப்படி வாழ்க்கையின் மேம்பட்ட வெற்றிநிலையைக் குறிக்கும்.[1] இது வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமான வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதலைக் குறிக்கும் என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.[2] எனினும் இதன் துறைகளில் தொல்காப்பியம் காட்டும் பொதுமக்களோடு தொடர்புடைய துறைகளும் இடம் பெற்றுள்ளன.
வாகை என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் ஒழுக்கத்தான் மிகுதல் வாகையாம் எனக் குறிப்பிடுவது வாகை என்பதனைத் தெளிவுபடுத்தும் குறிப்பாகும்.
தொல்காப்பியத்தில் வாகைத்திணையின் துறைகள்
தொகுவாழ்வியலின் வெற்றியாகிய வாகை ஏழு வகைப்படும்.[3] அவை
வகை
தொகு- பார்ப்பனப் பக்கம்
- அரசர் பக்கம்
- வணிகர் பக்கம்
- வேளாண் பக்கம்
- அறிவன் பக்கம்
- தாபதப் பக்கம்
- பொருநர் பக்கம்
துறை
தொகுஇதன் துறைகள் என இந்த நூல் குறிப்பிடுபவை பல.[4] அவற்றை அகர வரிசையில் இங்குக் காணலாம்.
புறப்பொருள் வெண்பாமாலையில் வாகைத்திணையின் துறைகள் விளக்கம்
தொகுவாகைத்திணையின் துறைகள் என இந்த நூல் 33 காட்டுகிறது.[5]
- சீர்சால் வாகை
- வாகை அரவம்,
- அரச வாகை ,
- முரச வாகை,
- மறக்கள வழி,
- கள வேள்வி
- முன்தேர்க் குரவை ,
- பின்தேர்க் குரவை,
- பார்ப்பன வாகை,
- வாணிக வாகை,
- வேளாண் வாகை ,
- வாணிக வாகை,
- அறிவன் வாகை,
- தாபத வாகை,
- கூதிர்ப் பாசறை,
- வாடைப் பாசறை,
- அரச முல்லை ,
- பார்ப்பான் முல்லை,
- அவைய முல்லை,
- கணிவன் முல்லை,
- மூதில் முல்லை,
- ஏறு ஆண் முல்லை,
- வல் ஆண் முல்லை,
- காவல் முல்லை,
- பேர் ஆண் முல்லை ,
- மற முல்லை,
- குடை முல்லை
- கண்படை நிலையே,
- அவிப்பலி
- சால்பு முல்லை,
- கிணைநிலை ,
- பொருளொடு புகறல்,
- அருளொடு நீங்கல்,
இலக்கியத்தில் வாகைத்திணை
தொகுவாகைத்திணையானது புறநானூற்றில் இடம்பெறும் ஒரு புறத்திணையாகும்[6].
தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடிய அரச வாகை புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. அரசவாகை என்பது அரசனது வெற்றியைச் சிறப்பாகக் கூறுதல் ஆகும். இது வாகைத் திணையின் ஓர் உட்பிரிவாகும்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ 'வாகைதானே பாலையது புறனே;
தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்' என்ப (தொல்காப்பியம் புறத்திணையியல் 15) - ↑ இலை புனை வாகை சூடி, இகல் மலைந்து,
அலை கடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 155) - ↑
'அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு-மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்,
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
நால்-இரு வழக்கின் தாபதப் பக்கமும்,
பால் அறி மரபின் பொருநர் கண்ணும்,
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலைபெற்றது' என்மனார் புலவர் (தொல்காப்பியம் புறத்திணையியல் 16) - ↑ தொல்காப்பியம் புறத்திணை-இயல் 17
- ↑ நூற்பா எண் 154
- ↑ திணை என்பது ஒழுக்கம், நெறி எனப் பொருள்படும்