அசாம் உடன்பாடு

(அஸ்ஸாம் அக்கார்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஸ்ஸாம் அக்கார்ட் (ஆங்கில மொழி: Assam Accord) என்பது இந்திய அரசிற்கும் அஸ்ஸாமிய மாணவர் அமைப்பிற்கும் இடையே 1985 ஆகஸ்ட் அன்று புது தில்லியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.[1][2][3] இந்த நிகழ்விற்குப் பிறகு மாணவர் இயக்கம் ஆட்சி பொறுப்பிற்கும் வந்தது.

பின்னணி

தொகு

1979 இல் நடந்த இடைத்தேர்தலில் வங்கதேசத்திலிருந்து வந்தவர்களில் பலர் வாக்குரிமை பெற்றிருந்ததாகச் சர்ச்சை கிளம்பியது.[4] அதிலிருந்து ஆறு ஆண்டுகளாக அனைத்து அஸ்ஸாம் மாணவர் இயக்கம்(AASU) என்ற அமைப்பு சட்டத்திற்குப் புறம்பான வெளிநாட்டுக் குடிமக்களை (வங்கதேசத்தவர்) அம்மாநிலத்திலிருந்து அடையாளம் கண்டு வெளியேற்றச் சொல்லிப் போராடியது. இப்போராட்டங்களை முடிவிற்குக் கொண்டுவர அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி தலையீட்டில் இந்த அஸ்ஸாம் அக்கார்ட் ஒப்பந்தம் 1985 இல் போடப்பட்டு, அமைதி திரும்பியது.இந்த ஒப்பந்தத்தால் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் சிலவற்றைத் தீர்த்து வைக்க இயலவில்லை.[5][6]

முக்கிய அம்சம்

தொகு

மாநில மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்த ஒப்பந்தமானது குறிப்பாக ஐந்து அம்சங்களைக் கொண்டுள்ளது.[4]

  • வெளிநாட்டினர் குடியமர்வு
  • பொருளாதார வளர்ச்சி
  • வெளிநாட்டினருக்கான அசையாச் சொத்து விற்பனை
  • அரசு நிலங்களை அபகரிப்பிருந்து பாதுகாத்தல்
  • பிறப்பு இறப்பினைப் பதிவு செய்தல்

1966 ஜனவரி ஒன்றாம் நாளுக்கு முன் அஸ்ஸாமிற்குக் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறி வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். அதன் பிறகு 1971 மார்ச் 24 வரை வந்தவர்கள் வெளிநாட்டினர் சட்டம் 1946 மற்றும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் ஆணை 1964 இன்படி தங்களை வெளிநாட்டினர் எனப் பதிவு செய்துகொண்டு, பத்தாண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை பெறலாம் என்கிறது.[4]

கையெழுத்திட்டோர்

தொகு

அஸ்ஸாம் இயக்கப் பிரதிநிதிகள்

  • பிரபுல்ல குமார் மகந்தா, தலைவர், அனைத்து அஸ்ஸாம் மாணவர் இயக்கம் (All Assam Students Union)
  • ப்ருகு குமார் புகுன், பொதுச் செயலாளர், அனைத்து அஸ்ஸாம் மாணவர் இயக்கம்
  • பிரஜ் ஷர்மா, பொதுச் செயலாளர், ஆல் அசோம் கன பரிசத்

இந்திய மற்றும் அஸ்ஸாம் அரசு பிரதிநிதிகள்

  • ஆர்.டி. பிரதான், உள்துறைச் செயலர், இந்திய அரசு
  • பி.பி. திரிவேதி, தலைமைச் செயலர், அஸ்ஸாம் அரசு

முன்னிலை

இவ்வற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Assam Accord" (PDF).
  2. Text of Assam Accord, according to the Part II (A) The Assam Gazette 23 June 2015, pp 7
  3. Assam Accord from the South Asia Terrorism Portal
  4. 4.0 4.1 4.2 "What is Assam Accord of 1985 and how amended citizenship law challenges it?". indiatoday. https://www.indiatoday.in/news-analysis/story/what-is-assam-accord-of-1985-and-how-amended-citizenship-law-challenges-it-1627965-2019-12-13. பார்த்த நாள்: 19 December 2019. 
  5. AASU questions Govts’ sincerity on Accord பரணிடப்பட்டது செப்டெம்பர் 28, 2007 at the வந்தவழி இயந்திரம், The Assam Tribune, 13 May 2007.
  6. "Union Cabinet clears panel to promote Assam’s cultural identity" (in en-IN). The Hindu. 2019-01-02. https://www.thehindu.com/news/national/union-cabinet-clears-panel-to-promote-assams-cultural-identity/article25892099.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_உடன்பாடு&oldid=3287380" இலிருந்து மீள்விக்கப்பட்டது