அ. குழந்தைவேல் முதலியார்

அ. குழந்தைவேல் முதலியார் (A. Kulandaivel Mudaliar 22 மே, 1926 – 23 ஆகத்து, 2007) என்பவர் இந்திய தொழிலதிபரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவரே சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை, எஸ். சி. எம் குழுமத்தின் நிறுவனர் ஆவர்.[1][2][3]

பிறப்பு

தொகு

இவர் 1926-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் அப்போதைய கோயமுத்தூர் மாவட்டதில் (தற்போதய திருப்பூர் மாவட்டம்) நெசவாளர் குடும்பத்தில் செங்குந்தர்கைக்கோள முதலியார்(பட்டாளியர் கோத்திரம்) குடும்பத்தில் பிறந்தார்.[4] இவரது பெற்றோரின் அமாவாசை முதலியார் - மயங்கம்மாள் ஆவர். இவர் தன் துவக்கக் கல்வியை ஒரு திண்ணைப் பள்ளியில் பயின்றார். மேற்கொண்டு படிக்க குடும்பச் சூழல் இடந்தராததால், தந்தையோடுச் சேர்ந்து, நெசவு தொழிலில் ஈடுபட்டார்.

வாழ்க்கை

தொகு

இவர் தன் 14வது வயதில் சுதந்திர உணர்வு கொண்டவராக ஆனார். நம் நாட்டில் தயாராகும் கதர் துணிகளையே அனைவரும் அணிய வேண்டும் என மகாத்மா காந்தியின் அறைகூவல் நெசவாளியான குழந்தைவேலைக் கவர்ந்தது. இவர் 1952ஆம் ஆண்டில் நாச்சம்மாள் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

முதன்முதலில் மதுரையில் துணிக்கடைத் துவக்கினார். தரமான துணி, நியாயமான விலை என ஆரம்பித்த அந்த கடை மதுரை மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1964-ல் இரண்டாவது கடையையும், 1973-ல் மூன்றாவது கடையையும் மதுரையிலேயே திறந்தார். அந்த கடைகளும் நல்ல வளர்ச்சி தரவே, 1976-ல் சேலத்திலும், 1979-ல் ஈரோட்டிலும் கதர் கடையைத் தொடங்கி முழுநேர தொழிலதிபராக மாறினார் குழந்தைவேல் முதலியார்.

1991-ல் திருப்பூரில் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் என்கிற பெயரில் ஒரு பெரிய பேரங்காடி ஒன்றைத் தொடங்கினார். பிறகு 2001 இல் சென்னை சில்க்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தார்.[5][6][7][8]

குறிப்புகள்

தொகு
  1. "About SCM The Founder". எஸ்.சி.எம் முழுமன். Archived from the original on 2020-10-22. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.
  2. "காலமானார் கே.நாச்சம்மால்". தினமணி. 7 பிப்பரவரி 2014. https://www.dinamani.com/tamilnadu/2017/feb/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2645011.html. 
  3. ரவீந்திரநாத், சுசிலா (2017). பாயும் தமிழகம் : தமிழக தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு / Paayum Tamizhagam : Tamizhaga Thozhilthurai Valarchiyin Varalaru. Kizhakku Pathippagam,. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9384149985.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  4. Damodaran, Harish (2018). INDIA'S NEW CAPITALISTS: Caste, Business, and Industry in a Modern Nation. Hachette UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351952800.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.
  6. https://www.forbesindia.com/article/bootstrapped-bosses/how-tk-chandiran-of-scm-group-companies-created-a-textile-empire/47793/1
  7. "Weaving a success story". Financial Express. 18 ஏப்ரல் 2014. https://www.financialexpress.com/archive/weaving-a-success-story/1241439/. 
  8. "The Chennai Silks: Spinning a success story". 26 மே 2017. https://www.moneycontrol.com/news/trends/features-2/chennai-silks-spinning-a-success-story-2289575.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._குழந்தைவேல்_முதலியார்&oldid=3860133" இலிருந்து மீள்விக்கப்பட்டது