அ. சந்திரசேகரன்

பத்திரிகை துனை ஆசிரியர்

அ. சந்திரசேகரன் (பிறப்பு: 1940) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பத்திரிகைத் துணையாசிரியருமாவார். எழுத்துறையில் இவர் "நாணல்" எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், வானொலி நாடகங்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. மலேசியா வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன. இவரது "பிளவு" என்னும் சிறுகதை தமிழகத்தில் பதிக்கப்பட்ட "அக்கரை இலக்கியம்" தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

நூல்கள்

தொகு
  • "அந்த நதியில் இரண்டு மீன்கள்" (நாவல் - 1967)

பரிசில்களும், விருதுகளும்

தொகு
  • சிங்கப்பூர் அரசாங்கம் நடத்திய தேசியப் பண்பாட்டுக் கழகச் சிறுகதைப் போட்டியில் பரிசு
  • மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க மாதாந்தர பவுன் பரிசு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சந்திரசேகரன்&oldid=3230615" இலிருந்து மீள்விக்கப்பட்டது