அ. பொன்னம்பலம்

இலங்கைத் தமிழ்த் தொழிலதிபர்

இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம், (Arunachalam Ponnambalam ) (1814 – 4 செப்டம்பர் 1887) ஓர் இலங்கை குடியேற்ற கால அரசாங்க செயல்பாட்டாளரும், வணிகரும், நன்கொடையாளரும் ஆவார். இவர் கொழும்பு கச்சேரியில் (மாவட்டத் தலைமையகம்) காசாளராக இருந்தார். மேலும் முதலியார் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்.

முதலியார்
அ. பொன்னம்பலம்
சமாதான நீதவான்
பிறப்பு1814
மானிப்பாய், சிலோன்
இறப்பு(1887-09-04)4 செப்டம்பர் 1887
பிள்ளைகள்பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் குமாரசுவாமி, பொன்னம்பலம் இராமநாதன்

ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும் தொகு

பிரித்தானிய இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மானிப்பாய் என்ற இடத்தில் அருணாசலம்-தங்கம் தம்பதியரின் மகனாக 1814இல் பொன்னம்பலம் பிறந்தார்.[1] [2] [3] [2] 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாண குடாநாட்டின் முன்னோடி குடியேற்றக்காரர்களில் ஒருவரான தொண்டை நாட்டைச் சேர்ந்த மன முதலியாரின் வழித்தோன்றல் இவரது தந்தைவழி முன்னோடியென நம்பப்படுகிறது. [2]

பொன்னம்பலத்தின் தந்தை, இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்தார். பின்னர், இவரது தாயார் ஆரியபுத்திரா என்பவரை மணந்தார்.[3] 1830ஆம் ஆண்டில், தனது 16 வயதில், பொன்னம்பலம் கொழும்பிலிருந்த முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - விசாலாட்சி தமபதியிடம் அனுப்பப்பட்டார்.[4] [2] அங்கு இவர் ரெஜிமென்டல் பள்ளியில் ஆங்கிலம் பயின்றார்.[2]

இவர், 1844 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி கேட் முதலியார் அ. குமாரசாமியின் மகள் செல்லாச்சி அம்மாவை மணந்தார்.[4] [3] இவர்களுக்கு ( பொன்னம்பலம் குமாரசுவாமி, பொன்னம்பலம் இராமநாதன் , பொன்னம்பலம் அருணாசலம் என மூன்று மகன்கள் பிறந்தனர்.

தொழில் தொகு

பொன்னம்பலம், குடியேற்றச் செயலாளர் அலுவலகத்தில் தன்னார்வலராக பணியாற்றினார். ஆனால் இவருக்கு அலுவலகத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை.[3] [2] இவர், சிலகாலம் வர்த்தகத்தை மேற்கொண்டார். ஆனால் வணிகம் மெதுவாக இருப்பதைக் கண்டார்.[3] [2] இவர் காப்பி சாகுபடியை மேற்கொண்டார். ஆனால் அதுவும் வெற்றிபெறவில்லை. [3] முதலியார் அ. குமாரசாமி இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, இவர், சுங்கத் திணைக்களத்தில் பொருட்களை தரையிறக்கும் பணியாளராகவும், தேடுபவராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் இப்பணியை தனது பணியிலிருந்து பெற்ற ஊதியத்திலிருந்து இவர் பல்வேறு பொது அதிகாரிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. [3][2] இருப்பினும், கடமை மற்றும் நேர்மை மீதான இவரது பக்தி அதிகாரத்தில் இருந்தவர்களால் கவனிக்கப்பட்டது. மேலும் 11 மே 1845இல் இவர் கொழும்பு கச்சேரியில் காசாளராக நியமிக்கப்பட்டார்.[3] [2] பிப்ரவரி 1847இல் இவர் கொழும்புக்கு துணை நீதித்துறை அதிகாரியானார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இவர் ஆளுநர் வாயிலின் முதலியாராக நியமிக்கப்பட்டார்.[4] [3] இவரது இந்த அதிகாரம் ஏப்ரல் 9, 1847 அன்று கொழும்பின் சனாதிபதி மாளிகையில் நடந்தது.[3][2] அக்டோபர் 1847இல் இவர் கொழும்பு மாவட்டத்திற்கான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வமற்ற நீதவானாக பணியாற்றினார்.[3] [2] ஆளுநர் டோரிங்டன் இவரை மேற்கு மாகாணத்தின் அரசாங்க முகவருக்கு சொந்த வருவாய் உதவியாளராக நியமித்தார். ஆனால் அது உதவியாளர் அல்ல அரசு முகவர் என்பதால் மாநிலச் செயலாளர் நியமனத்தை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். ஏனெனில் அந்த நேரத்தில் சட்டம் அரசாங்க முகவரை மட்டுமே வரி வசூலிக்க அனுமதித்தது. [3] [2] ஏமாற்றமடைந்த பொன்னம்பலம், பல உறவினர்களுடன், 1850 ஜனவரியில் இந்தியாவுக்கு யாத்திரைக்கு புறப்பட்டு, 1850 மே மாதம் இலங்கைக்குத் திரும்பினார். [3] [2]

பொன்னம்பலம் 1851ஆம் ஆண்டில் தனது வேலையில் ஆர்வத்தை இழக்கத் தொடங்கினார். 1854 செப்டம்பரில் இவரது மனைவி இறந்த பிறகு, 1854 நவம்பர் 30 ஆம் தேதி கொழும்பு கச்சேரியில் காசாளர் பதவியிலிருந்து விலகினார். [5] இவரது மூன்று இளம் மகன்களும் இவரது மாமியார் விசாலாட்சி வளர்க்க ஆரம்பித்தார். [6] [7] பின்னர், இவர் ஒரு வணிகரானார். பொருட்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்தார். ஆனால் வணிகத்தில் வெற்றிபெறத் தேவையான துணிச்சல் இல்லாததால் தோல்வியடைந்தார். [6] [8]

பிற்கால வாழ்வு தொகு

இவரது பிற்காலத்தில் பக்தியில் மூழ்கினார். தென்னிந்தியாவுக்கான தனது இந்து யாத்திரையால் ஈர்க்கப்பட்ட பொன்னம்பலம் 1856ஆம் ஆண்டில் கொழும்பு, கொச்சிக்கடையின் கடல் வீதியிலுள்ள ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் கோயிலில் ஒரு சிவன் கோவிலைக் கட்டத் தொடங்கினார். [4] [3] [2] இந்தக் கோயில் 1857 நவம்பர் 12 அன்று புனிதப்படுத்தப்பட்டது. [3] [2] பின்னர், நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து குணமடைய ஏழு ஆண்டுகள் ஆனது. [3]

தனது வயதான காலத்தில் தனது சொந்த உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாமலிருப்பதற்காக, கோயிலில் அதிக நேரம் செலவிட்டார். [3] 1879 ஆம் ஆண்டில் இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஆனால் குணமடைந்து தனது கோவில் கடமைகளைத் தொடர்ந்தார். [3] இவருக்கு இரண்டாவது பக்கவாதம் ஏற்பட்டது, அது இவரை முடக்கியது. [3] இவரது மூத்த மகன் குமாரசாமி இவரை கவனித்துக்கொண்டார். ஓரளவு குணமடைந்த [3] இவர் செப்டம்பர் 4, 1887 இல் இறந்தார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 140–141.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 Muttucumaraswamy 1973.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 Vythilingam 1971.
  4. 4.0 4.1 4.2 4.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 140–141.Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 140–141.
  5. Vythilingam 1971, ப. 63.
  6. 6.0 6.1 Vythilingam 1971, ப. 64.
  7. Muttucumaraswamy 1973, ப. 10.
  8. Vythilingam 1971, ப. 67.

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பொன்னம்பலம்&oldid=3603320" இலிருந்து மீள்விக்கப்பட்டது