அ (இடைச்சொல்)
அ என்பது தமிழிற் பயன்படுத்தப்படும் ஓர் இடைச்சொல் ஆகும்.[1] இது விகுதி, சாரியை, வேற்றுமை உருபு, சுட்டு, முன்னொட்டு போன்றனவாகப் பயன்படுத்தப்படுகின்றது.
சுட்டு
தொகுஅ அகச்சுட்டாகவோ புறச்சுட்டாகவோ அமையலாம்.[2] மொழிமுதலில் சுட்டுப்பொருளைக் காட்டும்படி வந்தால் மட்டுமே இது சுட்டாகக் கொள்ளப்படும்.[3] எனவே, அன்பு போன்ற சுட்டுப்பொருள் உணர்த்தாத சொற்களைச் சுட்டாகக் கருத முடியாது.[4]
அகச்சுட்டு
தொகுசொல்லின் அகத்தேயிருந்து சுட்டுப்பொருள் உணர்த்துவது அகச்சுட்டாகும்.[5] அவன், அந்த, அங்கு, அது முதலிய சொற்களை அ அகச்சுட்டாக அமைவதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.[4][6]
புறச்சுட்டு
தொகுசொல்லின் புறத்தேயிருந்து சுட்டுப்பொருள் உணர்த்துவது புறச்சுட்டாகும்.[5] இங்குச் சுட்டெழுத்தைப் பிரித்தாலும் மற்றையது தனித்து நின்று பொருள் தரும்.[4] அக்காடு, அச்சிலை, அவ்யானை, அவ்வாடு முதலிய சொற்களை அ புறச்சுட்டாக அமைவதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.[6] செய்யுள்களில் அகரச் சுட்டு நீண்டு ஆ ஆவதுமுண்டு.[7] ஆ + இடை = ஆயிடை, ஆ + இருதிணை = ஆயிருதிணை முதலியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.[7][8]
வேற்றுமை உருபு
தொகுஅ என்பது ஓர் ஆறாம் வேற்றுமை உருபாகும்.[9] வருமொழி பன்மையாக இருப்பின் இவ்வுருபு பயன்படுத்தப்படும்.[10] இது தற்கிழமைப் பொருளிலும் பிறிதின்கிழமைப் பொருளிலும் வரும்.[11] வேற்றுமை உருபாக அ பயன்படுத்தப்படுவதற்கு எடுத்துக்காட்டுகளாகத் தன கைகள், தன தாள்கள் முதலியவற்றைக் கூறலாம்.[11]
விகுதி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ அ. கி. பரந்தாமனார். நல்ல தமிழ் எழுத வேண்டுமா?. p. 54.
- ↑ சங்கர நமச்சிவாயர். நன்னூல் விருத்தியுரை. p. 151.
- ↑ அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே
-நன்னூல் 66 - ↑ 4.0 4.1 4.2 பண்டிதர் க. நாகலிங்கம் (2000). செந்தமிழ் இலக்கண விளக்கம் முதலாம் பாகம். ஏழாலை மஹாத்மா அச்சகம். p. 24.
- ↑ 5.0 5.1 "அகச்சுட்டு, புறச்சுட்டு விளக்கம் தருக". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 6.0 6.1 மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (1985). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முதன்மடலம்–முதற் பகுதி அ. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். p. 1.
- ↑ 7.0 7.1 பண்டிதர் க. நாகலிங்கம் (2000). செந்தமிழ் இலக்கண விளக்கம் முதலாம் பாகம். ஏழாலை மஹாத்மா அச்சகம். p. 98.
- ↑ வைத்தியநாத தேசிகர். இலக்கண விளக்கம் எழுத்ததிகாரம். p. 428.
- ↑ "வேற்றுமை தொடர்பான பிற கருத்துகள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ஆறனொருமைக் கதுவு மாதுவும்
பன்மைக் கவ்வு முருபாம்
-நன்னூல் 300 - ↑ 11.0 11.1 ஆறுமுகநாவலர் (1949). இலக்கணச்சுருக்கம். வித்தியாநுபாலனயந்திரசாலை. pp. ௯௭.
வெளியிணைப்புகள்
தொகு- அ – விளக்கம்