ஆகாயக் கருடன்
|
ஆகாயக் கருடன் (அறிவியல் பெயர் : COROLLO CARTUS), (ஆங்கில பெயர் : BRYOMS) இது கோவைக்காய் போன்று வளர்ந்து படரும் கொடி ஆகும். இது பூக்கும் தாவரம் ஆகும். காடுகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் கிழங்கு ஒரு மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. நீர் ஆதாரம் ஏதும் இல்லையென்றாலும் தானாக வளரும். இக்கிழங்கை வீட்டில் கட்டித் தொங்கவிட்டால் விச பூச்சிகள் வராது, மேலும் விச முறிவிற்கு இக்கிழங்கு பயன்படுகிறது.