ஆகாஷ் (தத்தல் கணினி)
டேட்டாவின்ட் ஆகாஷ் (Aakash) அண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் தத்தல் தனிப்பயன் கணினியாகும். எண்ணிம இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன் குறைந்தவிலையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. முதல்நிலையில் தகவல் தொழில்நுட்பம் கொண்டு கல்வியை முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் மின் வலைவாசல் மூலம் இணையவழிக் கல்வி வழங்க 25,000 கல்லூரிகளையும் 400 பல்கலைக்கழகங்களையும் குறியிட்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது[5]. இதன் விலை ₹ 1500 ($35/-)க்குள் இருக்கவேண்டும் என்ற இலக்குடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. டேட்டாவின்ட் நிறுவனத்தின் இந்திய, கனடிய ஆய்வகங்களில் நூல்கள், திரைப்படங்கள், இசை, விளையாட்டுக்கள் மற்றும் இணைய உள்ளடக்கங்களுக்கான ஓர் தளமாக இந்த கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வணிக வடிவம் யூபிஸ்லேட் 7 (UbiSlate 7) என்றப் பெயரில் 3000 ரூபாயில் சந்தைப்படுத்தப்படும்.[6]
உருவாக்குனர் | டேட்டாவின்ட், இந்தியா மற்றும் டேட்டாவின்ட், கனடா[1][2] |
---|---|
உற்பத்தியாளர் | டேட்டாவின்ட், ஐக்கிய இராச்சியம்[3][4] |
வகை | தத்தல் கணினி |
வெளியீட்டு தேதி | 2011 |
விலை | அரசுக்கு ஒரு கருவிக்கான அடக்கவிலை ₹1,300 (US$16) ;₹2,250 (US$28) ;விற்பனை விலை = ₹2,999 (US$38) |
இயக்க அமைப்பு | அண்ட்ராய்டு 2.2 |
ஆற்றல் | 2–3 மணிகள். உட்புற மீள்ஊட்ட வசதிகொண்ட மாற்றவியலா லித்தியம் அயனிப் பலபடி மின்கல அடுக்கு |
மைய செயற்பகுதி | 366 மெகாஹெர்ட்ஸ் செயலி ;சில்லு மீதான வரைகலை விரைவூட்டி மற்றும் உயர்விரைவு ஒளித செயலி |
சேமிப்பு திறன் | 2GB (உட்புற)திடீர் நினைவகம், 32 GB வரை விரிவுபடுத்தக்கூடியது |
நினைவகம் | 256 MB LP-DDR2/DDR2 |
Display | 7-அங் ; 800x480 நுண்திறன் |
உள்ளீடு | பல்வகை தொடுகை ,மின்தடை தொடுதிரை, காதுகேள் கருவி கட்டுப்பாடுகள் |
Connectivity | ஒய்-ஃபை தொடர்பு ;ஜி.பி.ஆர்.எசு |
Online services | 1 வருட வாரண்டி |
Weight | 350 கிராம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ John Ribeiro. "India's low-cost tablet is made by Canada's DataWind". Computerworld. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
- ↑ Jack, Frank. "India launches "world's cheapest" tablet". The Vancouver Sun. Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
- ↑ "Indias 35 tablet to be unveiled tomorrow – Mobile Phone | ThinkDigit News". Thinkdigit.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
- ↑ "India's $35 tablet computer meant for students to be launched tomorrow | MF Monitor". Microfinancemonitor.com. 15 November 2009. Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
- ↑ India unveils prototype for $35 touch-screen computer BBC World news-South Asia Retrieved 25 July 2010
- ↑ Commercial version of $35 tablet to be called Datawind Ubislate 7