ஆக்கிரமிப்பு உயிரினம்
ஆக்கிரமிப்பு உயிரினம் அல்லது அயல் உயிரினம் (invasive or alien species) என்பது அறிமுகப்படுத்தப்பட்ட இனமாகும். இந்த அறிமுகப்படுத்தபட்ட இனத்தின் எண்ணிக்கை மிகுந்து அந்த புதிய சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக மாறக்கூடியது ஆகும். ஆக்கிரமிப்பு இனங்கள் புதிய வாழ்விடங்கள் மற்றும் உயிரின மண்டலத்தை மோசமாக பாதிக்கின்றன. இதனால் சூழல் அல்லது பொருளாதார சேதம் உண்டாகிறது. உணவுப்பின்னலில் மனிதர்கள் செய்த மாற்றங்களினால், பூர்வீகச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பூர்வீக உயிரினங்களுக்கும் இந்தச் சொல் சிலசமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஊதா கடல் முள்ளெலி ( Strongylocentrotus purpuratus ) அதன் இயற்கை வேட்டையாடியான கலிபோர்னியா கடல் ஓட்டர் ( கடற்கீரி ) அதிக அளவில் பிடிக்கபட்டதன் காரணமாக வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் கடற்பாசி காடுகள் அழிந்துவிட்டன. [1] 20 ஆம் நூற்றாண்டிலிருந்து, ஆக்கிரமிப்பு இனங்கள் கடுமையான பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
உயிரினங்கள் நீண்டகாலமாக நிலைத்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீது படையெடுப்பது என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் மனிதரால் எளிதாக்கப்பட்ட அறிமுகப்படுத்தபட்ட இனங்களின் படையெடுப்பின் வீதம், அளவு, புவியியல் எல்லை போன்றவை பெரிதும் அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதர்கள் தற்செயலாகவோ மற்றும் வேண்டுமென்றே உயிரினங்களை பரவவிடுபவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் தொடக்ககால இடம்பெயர்வுகளில் தொடங்கி, கண்டுபிடிப்புக் காலத்தில் முடுக்கம் பெற்று, சர்வதேச வணிகத்த்தினால் மீண்டும் முடுக்கம் பெற்றன. [2] ஆக்கிரமிப்பு தாவர இனங்களில் சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை, உண்ணிச்செடி, பார்த்தீனியம் ஆகியவை குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ஆக்கிரமிப்பு விலங்குகளுக்கு எடுத்துக்காட்டுகளாக ஆப்பிரிக்கன் கெளுத்தி, டேங் கிளானர், வீழ்ச்சி படைப்புழு ஆகியவை உள்ளன. [3] [4][5]
குறிப்புகள்
தொகு- ↑ "Plague of purple sea urchins ravages California's offshore ecosystem, heads to Oregon". Los Angeles Times. October 24, 2019. Archived from the original on July 14, 2021. பார்க்கப்பட்ட நாள் July 14, 2021.
- ↑ Mack, R.N.; Simberloff, Daniel; Lonsdale, W.M.; Evans, H.; Clout, M.; Bazzaz, F.A. (2000). "Biotic invasions: causes, epidemiology, global consequences, and control". Ecological Applications (Ecological Society of America) 10 (3): 689. doi:10.1890/1051-0761(2000)010[0689:BICEGC]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1051-0761. https://semanticscholar.org/paper/3073e8d84afa5584c00aca60073705d2891b133b. பார்த்த நாள்: December 2, 2019.
- ↑ Krishna, Neal; Krishna, Vandana M.; Krishna, Ryan N.; Krishna, Sampath (February 2018). "The Invasiveness of the Genus Sylvilagus in Massachusetts and the Resulting Increase in Human Allergen Sensitization to Rabbits". Journal of Allergy and Clinical Immunology 141 (2): AB236. doi:10.1016/j.jaci.2017.12.747.
- ↑ Cove, Michael V.; Gardner, Beth; Simons, Theodore R.; Kays, Roland; O'Connell, Allan F. (February 1, 2018). "Free-ranging domestic cats (Felis catus) on public lands: estimating density, activity, and diet in the Florida Keys". Biological Invasions 20 (2): 333–44. doi:10.1007/s10530-017-1534-x.
- ↑ "ஆபத்தாகும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.