ஆக்டினியம் புளோரைடு

ஆக்டினியம் புளோரைடு (Actinium fluoride) என்பது AcF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

ஆக்டினியம் புளோரைடு
Actinium fluoride

படிகக் கட்டமைப்பு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்டினியம்(III) புளோரைடு
ஆக்டினியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
33689-80-4 Y
InChI
  • InChI=1S/Ac.3FH/h;3*1H/q+3;;;/p-3 Y Y
  • InChI=1/Ac.3FH/h;3*1H/q+3;;;/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101943120
  • F[Ac](F)F
பண்புகள்
AcF3
வாய்ப்பாட்டு எடை 284 கி/மோல்[1]
தோற்றம் வெண்மை, படிகத் திண்மம்
அடர்த்தி 7.88 கி/செ.மீ3[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், hR24
புறவெளித் தொகுதி P3c1, No. 165[2]
Lattice constant a = 0.741 நா.மீ, c = 0.755 நா.மீ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

கரைசல் அல்லது திண்மநிலை வினையின் வழியாக ஆக்டினியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது. முதல் வழிமுறையில் ஆக்டினியம் ஐதராக்சைடு ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தப்படுவதனால் விளைபொருள் வீழ்படிவாக்கப்படுகிறது :[3]

 .

திண்மநிலை வினையில் ஆக்டினியம் உலோகம் ஐதரசன் புளோரைடு வாயுவுடன் சேர்த்து பிளாட்டினப் புடக்குவளையில் வைத்து 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஆக்டினியம் புளோரைடு உருவாகிறது [4][5].

பண்புகள்

தொகு

ஆக்டினியம் புளோரைடு வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. 900-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் அமோனியாவுடன் வினைபுரிந்து ஆக்டினியம் ஆக்சி புளோரைடைத் தருகிறது.

 

இலந்தனம் புளோரைடை காற்றில் சூடுபடுத்தினாலேயே எளிமையாக இலந்தனம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது. ஆனால் மேற்கண்ட முறையில் சூடாக்கினால் ஆக்டினியம் புளோரைடு உருகிவிடுகிறது. ஆக்டினியம் ஆக்சி புளோரைடு உருவாவதில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
  2. Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016. 
  3. Haire, Richard G. (2006). "Actinium". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.
  4. Fried, Sherman; Hagemann, French; Zachariasen, W. H. (1950). "The Preparation and Identification of Some Pure Actinium Compounds". Journal of the American Chemical Society 72 (2): 771. doi:10.1021/ja01158a034. 
  5. Meyer, Gerd and Morss, Lester R. (1991) Synthesis of lanthanide and actinide compounds. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7923-1018-7. pp. 87–88
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினியம்_புளோரைடு&oldid=3734695" இலிருந்து மீள்விக்கப்பட்டது