ஆக்டைல் சாலிசிலேட்டு

ஆக்டைல் சாலிசிலேட்டு (Octyl salicylate) என்பது C15H22O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எசுத்தர் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தை சாலிசிலிக் அமிலத்துடன் 2-எத்திலெக்சனால் சேர்மத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் வழியாகத் தயாரிக்கலாம். நிறமற்று, பூவின் மணத்துடன் எண்ணெய்த்தன்மை கொண்ட நீர்மமாக ஆக்டைல் சாலிசிலேட்டு காணப்படுகிறது. 2-எத்திலெக்சைல் சாலிசிலேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிரிலிருந்து பாதுகாக்க உதவும் குழைமங்களிலும் ஒப்பனைப் பொருட்களிலும் பகுதிப்பொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [1].

ஆக்டைல் சாலொசிலேட்டு
Octyl salicylate
Structural formula of octyl salicylate
Ball-and-stick model of the octyl salicylate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-எத்திலெக்சைல் 2-ஐதராக்சிபென்சோயேட்டு
வேறு பெயர்கள்
ஆக்டிசலேட்டு; 2-எத்திலெக்சைல் சாலிசிலேட்டு; எத்தில் எக்சைல் சாலிசிலேட்டு; 2- எத்திலெக்சைல் எசுத்தர் சாலிசிலிக் அமிலம்; 2-எத்திலெக்சைல் எசுத்தர் பென்சாயிக் அமிலம்,
இனங்காட்டிகள்
118-60-5 Y
ChEMBL ChEMBL117388 Y
ChemSpider 8061 N
InChI
  • InChI=1S/C15H22O3/c1-3-5-8-12(4-2)11-18-15(17)13-9-6-7-10-14(13)16/h6-7,9-10,12,16H,3-5,8,11H2,1-2H3 N
    Key: FMRHJJZUHUTGKE-UHFFFAOYSA-N N
  • InChI=1/C15H22O3/c1-3-5-8-12(4-2)11-18-15(17)13-9-6-7-10-14(13)16/h6-7,9-10,12,16H,3-5,8,11H2,1-2H3
    Key: FMRHJJZUHUTGKE-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8364
  • CCCCC(CC)COC(=O)C1=CC=CC=C1O
UNII 4X49Y0596W Y
பண்புகள்
C15H22O3
வாய்ப்பாட்டு எடை 250.33 கி/மோல்
அடர்த்தி 1.014 கி/செ.மீ3
உருகுநிலை < 25 °C (77 °F; 298 K)
கொதிநிலை 189 °C (372 °F; 462 K)
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆக்டைல் சாலிசிலேட்டு மூலக்கூறின் சாலிசிலேட்டுப் பகுதி சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா ஒளியை ஈர்த்துக் கொள்கிறது. இதனால் சூரிய ஒளியினால் உண்டாகும் தீங்கான விளைவுகளின் பாதிப்பிலிருந்து தோல் பாதுகாக்கப்படுகிறது. எத்திலெக்சனால் பகுதியானது ஒரு கொழுப்பு ஆல்க்காலாகும். நீரை எதிர்க்கும் பண்பையும் எண்ணெய் போல இளகும் தன்மையையும் இது கொடுக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  • "The Skin Cancer Foundation's Guide to Sunscreens". Skin Cancer Foundation. 2011. Archived from the original on 23 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 November 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டைல்_சாலிசிலேட்டு&oldid=3850728" இலிருந்து மீள்விக்கப்பட்டது