ஆக்னஸ் மோனிகா
ஆக்னஸ் மோனிகா (பிறப்பு: ஜூலை 1, 1986), இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பாடகியும், பாடலாசிரியையும், நடிகையும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தனது ஆறாவது வயதில் ஒரு குழந்தைப் பாடகியாக அறிமுகமானார். மூன்று சிறுவர்களுக்கான இசைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். பல சிறுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடத்துனராகவும் இருந்துள்ளார். பதின்ம வயதில், தனது தொழிலை விரிவாக்கி நடிப்பதிலும் ஈடுபட்டார்.
ஆக்னஸ் மோனிகா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஆக்னஸ் மோனிகா |
பிறப்பு | சூலை 1, 1986 சான்டா பார்பரா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
இசை வடிவங்கள் | பாப் |
தொழில்(கள்) | பாடகர்-பாடலாசிரியர், இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு, கிட்டார் |
இசைத்துறையில் | 1992–நிகழ்வில் |
வெளியீட்டு நிறுவனங்கள் | கும்பம் இசைஇந்திய (2005) |
இணையதளம் | www.agnezmo.com |
2003ல் இவரது நான்காவது இசைத்தொகுப்பு வெளியானபோது இவர் குழந்தைப் பாடகி என்ற நிலையில் இருந்து ஒரு வளர்ந்த பெண் பாடகி என்ற நிலையைப் பெற்றார். இவரது ஐந்தாவது இசைத்தொகுப்பை அமெரிக்கப் பாடகரான கீத் மார்ட்டினுடன் சேர்ந்து வெளியிட்டார். இவர் இரண்டு தாய்வான் நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார். 2008 இலும் 2009 இலும், தென்கொரியாவின் சியோலில் இடம்பெற்ற ஆசியப் பாட்டு விழாவில் பங்கேற்று இருதடவையும் ஆசியாவின் சிறந்த பாடகி என்னும் விருதைப் பெற்றார்.