ஆங்காங்கின் சூழலியல்

ஆங்காங்கின் சூழலியல் ( Ecology of Hong Kong) பெரும்பாலும் காலநிலை மாற்றங்களின் முடிவுகளால் பாதிக்கப்படுகிறது. குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் இடையே காற்று திசை மாறுவதன் விளைவாக ஆங்காங்கின் பருவகாலமானது காலவரைக்குட்பட்ட பருவகாலமாக விளங்குகிறது. இலட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆங்காங்கின் நிலப்பகுதி நிலைப்புத்தன்மையுடன் உறுதியானதாக இருக்கிறது. காலநிலை மாற்றம், கடல்மட்டத்தின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மனித நடவடிக்கைகளின் தாக்கம் போன்ற காரணிகள் இங்குள்ள தாவரங்களும் விலங்குகளும் மாற்றம் அடைகின்றன.

காலநிலைதொகு

மிதவெப்ப மண்டல காலநிலையில் ஆங்காங் இருக்கிறது என்றாலும் ஓராண்டின் பாதி நாட்கள் இங்கு மிதத்தட்ப நிலை நிலவுகிறது. கடக ரேகைக்கு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இப்பிரதேசத்தின் அட்சரேகை அவாய் தீவிற்குச் சமமாக இருக்கிறது. குளிர் காலத்தில் பலமான மற்றும் குளிர்ச்சியான காற்று வடக்குத் திசையில் இருந்து ஆங்காங்கை நோக்கி வீசுகிறது. கோடை காலத்தில் இதற்கு எதிர்மாறாக காற்றானது தெற்கு திசையில் இருந்து சூடாகவும் ஈரப்பதத்துடனும் வீசுகிறது. இக்காலநிலை வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு ஏற்ற காலநிலையாகும்.

 
வரைபடத்தில் ஆங்காங்கின் அட்சரேகை காட்டப்படுகிறது. சீனா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் ஆங்காங்கின் அட்சரேகை அவாய்த் தீவின் ஓனலுலுவின் (வரைபடத்தை வலது பக்கத்தில்) அட்சரேகைக்குச் சமமாக இருக்கிறது

.


நிலப்பகுதிதொகு

ஆங்காங்கின் மொத்த நிலப்பரப்பு 1076 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்நிலப்பகுதியில் 2600 வகையான கடத்துத்திசு தாவரங்கள், 450 வகை பறவையினங்கள், 200 வகையான பட்டாம்பூச்சிகள், 100 வகையான தும்பிகள், 40 வகையான பாலூட்டிகள், 80 வகையான ஊர்வன இனங்கள், 20 வைகையான இரு வாழ்விகள், இவ்விடத்திற்கே உரிய சில மரபுசார் உயிரினங்கள் ஆகியன இப்பகுதியில் காணப்படுகின்றன.

சிறப்பினங்கள் தரும் சிறப்புதொகு

சிறப்பின உயிரினங்களின் எண்ணிக்கை ஆங்காங்கில் அதிகமாகக் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. சீனாவில் உள்ள மொத்த பறவைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பறவைகள் ஆங்காங்கில் இருக்கின்றன. அதேபோல சீனாவில் உள்ள மொத்த பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு ஆங்காங்கில் இருக்கின்றனா என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.[1]

ஆங்காங்கின் சூழலியல் அமைப்புகள்தொகு

மாங்குரோவ் சதுப்பு நிலங்கள்தொகு

அலைகளின் சீற்ற நடவடிக்கைகளை பெருமளவில் குறைக்கக்கூடியதும் அலை ஏற்ற இறக்கங்களால் மூடப்பட்ட வாழிடமாக விளங்கும் களிமண் தளங்கள் மாங்குரோவ் சதுப்புநிலங்கள் எனப்படும். ஆங்காங்கில், புதிய நீர் ஆதாரங்களுக்கு அருகில் பாக் நய் மற்றும் திசிம் பெய் திசுய் போன்ற தீப் வளைகுடா பகுதிகளில் பிரபலமான சதுப்புநில வாழிடங்கள் காணப்படுகின்றன. பொதுவாக புதிய நீர் ஆதாரங்களிலும் மற்றும் ஃபாதோம்சு கோவ் மற்றும் திங்காக் போன்ற களிமண் தளங்களில் லும் இருக்கும் உவர்ப்புத் தன்மை குறைவாக உள்ள நீர்ப்பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இத்தகைய சதுப்பு நிலங்களில் வளரும் மரங்கள் சதுப்புநில மரங்கள் எனப்படுகின்றன.

ஆங்காங்கில் மாங்குரோவ் சதுப்பு நிலங்கள் அமைந்திருக்கும் பகுதிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • தீப் வளைகுடா
  • தோலோ துறைமுகம்
  • ஒய் ஆ வான்
  • லாங் துறைமுகம்
  • ஏப் ஏவன்
  • தாய் ஓ நகரம்
  • துங் சங் நகரம்
  • தாய் தம் துறைமுகம்
  • புய் ஓ பகுதி [2]
  • கெய் லிங் ஆ
தாய் ஓ நகரத்தில் மாங்குரோவ்

பாறைக் கடற்கரைகள்தொகு

ஆங்காங்கில் அலைவீச்சு உயரம் 2.5 மீட்டர்கள் ஆகும். இப்பகுதிகளில் உள்ள சிறப்பினங்கள் கண்டிப்பாக உயர் அலை மற்றும் தாழ் அலை சூழல் இரண்டிற்கும் ஏற்புடைய தகவமைப்பு கொண்டிருக்க வேண்டும். உயர் அலை காலத்தில் கடற்கரைகள் மூழ்கியிருக்கலாம் மற்றும் தாழ் அலை காலங்களில் நேரடியாக் காற்றுடன் தொடர்பு கொள்ளவும் நேரிட்டும். இத்தகைய மாற்றங்கள் சில மணி நேரங்கள் முதல் சிலநாட்கள் வரையிலும் கூட நீடிக்கலாம். இவ்விரு சூழல்களுக்கும் ஏற்ற உயிரினங்கள் பாறைக் கடற்கரைகளில் உள்ள இத்தகைய குறுகலான செங்குத்துப் பகுதிகளில் தாக்குப்பிடித்து வளர்கின்றன.

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்காங்கின்_சூழலியல்&oldid=2225837" இருந்து மீள்விக்கப்பட்டது