ஆங்கிசெராடொப்ஸ்

ஆங்கிசெராடொப்ஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசஸ் காலம்
Anchiceratops dinosaur.png
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரொப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: ஓர்னிதிஸ்ச்சியா
துணைவரிசை: மார்ஜினோசெஃபாலியா
உள்வரிசை: செராடொப்சியா
குடும்பம்: செராடொப்சிடீ
துணைக்குடும்பம்: செராடொப்சினீ
பேரினம்: ஆங்கிசெராடொப்ஸ்
இனம்: ஆங்கிசெராடொப்ஸ்
ஓர்னேட்டஸ்

ஆங்கிசெராடொப்ஸ் என்பது, செராடொப்சிட் தொன்மாக் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். நேரடியாக மொழிபெயர்க்கும்போது இதன் பெயர் அண்மைக் கொம்பு முகம் என்னும் பொருள் தரும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பிந்திய கிரீத்தேசியக் காலப் பகுதியைச் சேர்ந்தது. ஏனைய செராடொப்சிட்டுகளைப் போலவே இவை நாலுகாலிகளும், தாவர உண்ணிகளும் ஆகும். இவற்றின் முகத்தில் மூன்று கொம்புகளும், கிளிக்கு உள்ளதுபோல் வளைவான அலகும் இருக்கும். இவற்றின் தலையின் பின்புறம் தட்டையான நீட்சி இருக்கும். கண்களுக்கு மேல் காணப்படும் இரண்டு கொம்புகள், மூக்கின் மேலுள்ளதிலும் நீளம் கூடியவை. ஆங்கிசெராடொப்சுகள் 6 மீட்டர்கள் (20 அடி) வரை நீளமாக வளரக்கூடியன.

தொல்பழங்கால உயிரியல்தொகு

பிற செராடொப்சியன்களுடன் ஒப்பிடும்போது, ஆங்கிசெராடொப்புகள், இப்பகுதியில் மிகவும் அரிதாகவே உள்ளன. இவை, குதிரைலாடச் செங்குத்துப் பள்ளத்தாக்குப் (Horseshoe Canyon) பகுதி, தொன்மாப் பூங்கா அமைவு (Dinosaur Park Formations) ஆகிய இரு இடங்களிலும் கடல்சார் படிவுப் பகுதிகளை அண்டியே அதிகம் காணப்படுகின்றன. இது ஆங்கிசெராடொப்புகள், மற்ற செராடொப்புகள் வாழாத, கயவாய்ப் பகுதிகளில் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. பூக்கும் தாவரங்கள் ஓரளவு காணப்படினும் ஊசியிலைத் தாவரங்களும், சைக்காட்டுகளும், பன்னங்களுமே அதிகம். இவையே செராடொப்சிய தொன்மாக்களில் உணவின் பெரும் பகுதியாக இருந்திருக்கக்கூடும்.

பால்சார் ஈருருவமைப்புதொகு

இவ்வகை விலங்கொன்றின் சிறிய மண்டையோடு ஒன்றை, அதன் அளவு; ஒப்பீட்டளவில் நீண்ட அலகு; நீளம் குறைந்த, முன் நீட்டியிருக்கும் கொம்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சி. எம். ஸ்டேர்ன்பேர்க், ஆங்கிசெராடொப்ஸ் லொங்கிரோஸ்ட்ரிஸ் என்னும் புதிய இனமாக வகைப்படுத்தினார். எனினும் தற்காலத் தொல்லுயிரியலாளர்கள், ஆ. ஓர்னேட்டஸ் என்னும் இனத்துள் அடங்கும் எனக் கண்டறிந்துள்ளனர்.

ஆங்கிசெராடொப்ஸ் லொங்கிரோஸ்ட்ரிஸ் என்பது உண்மையில் ஒரு பெண் விலங்காக இருக்கலாம் என்ற அடிப்படையில், ஆங்கிசெராடொப்ஸ் ஒரு பால்சார் ஈருருவமைப்புக் கொண்ட விலங்காக இருக்கலாம் எனக் ஊகிக்கப்படுகிறது. பால்சார் ஈருருவமைப்பு செராடொப்சிடீப் பேரினத்தின் வேறு இனங்களிலும் அறியப்பட்டுள்ளது. டிரைசெராடொப்ஸ், டோரோசோரஸ், பென்டாசெராடொப்ஸ் போன்றவற்றில் இவ்வியல்பு கூடிய வலுவுடனும், காஸ்மோசோரஸ் போன்றவற்றில் வலுக்குறைந்தும் காணப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிசெராடொப்ஸ்&oldid=2741940" இருந்து மீள்விக்கப்பட்டது