செராடொப்சிடீ
செராடொப்சிட் புதைப்படிவ காலம்:பிந்தியகிரீத்தேசியக் காலம் | |
---|---|
டிரைசெராடொப்ஸ் மண்டையோடு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | சேராடொப்சிடீ மார்ஷ், 1890
|
துணைக்குடும்பங்கள் | |
செராடொப்சிடீ என்பது மார்ஜினோசெஃபாலியா தொன்மாக்களை உள்ளடக்கிய ஒரு குடும்பம் ஆகும். இக் குடும்பம், டிரைசெராடொப்ஸ், ஸ்டைராகோசோரஸ் ஆகிய பேரினங்களை உள்ளடக்கியது. இதற்குள் அடங்கிய அறியப்பட்ட இனங்கள் எல்லாமே வட அமெரிக்காவில் மேல் கிரீத்தேசியக் காலத்தவையான நாலுகாலிகளும், தாவர உண்ணிகளும் ஆகும். இவற்றுக்குச் சிறப்பியல்பான அலகுகள் காணப்படுகின்றன. தாடையின் பின்புறத்தில் கிழிக்கும் பற்கள் உள்ளன. கொம்புகளும் உண்டு. இக் குடும்பம் இரண்டு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று செராடொப்சினீ அல்லது சாஸ்மோசோரினீ. மற்றது செண்ட்ரோசோரினீ
வகைப்பாடு
தொகு- குடும்பம் செராடொப்சிடீ
- துணைக்குடும்பம் செண்ட்ரோசோரினீ
- ஆக்கிலூசோரஸ் (Achelousaurus)- (மொண்டானா, ஐ. அமெரிக்கா)
- ஆல்பேர்ட்டாசெராடொப்ஸ் (Albertaceratops) - (ஆல்பேர்ட்டா, கனடா மற்றும் மொண்டானா, ஐ. அமெரிக்கா)
- ? ஏவாசெராடொப்ஸ் (Avaceratops) - (மொண்டானா, ஐ. அமெரிக்கா)
- பிராக்கிசெராடொப்ஸ் (Brachyceratops) - (ஆல்பேர்ட்டா, கனடா மற்றும் மொண்டானா, ஐ. அமெரிக்கா)
- செண்ட்ரோசோரஸ் (Centrosaurus) - (ஆல்பேர்ட்டா, கனடா)
- எய்னியோசோரஸ் (Einiosaurus) - (மொண்டானா, ஐ. அமெரிக்கா)
- மொனோகுளோனியஸ் (Monoclonius) - (ஆல்பேர்ட்டா, கனடா மற்றும் மொண்டானா, ஐ. அமெரிக்கா)
- பாக்கிரைனோசோரஸ் (Pachyrhinosaurus) - (ஆல்பேர்ட்டா, கனடா மற்றும் அலாஸ்கா, ஐ. அமெரிக்கா)
- ஸ்டைராக்கோசோரஸ் (Styracosaurus) - (ஆல்பேர்ட்டா, கனடா மற்றும் மொண்டானா, ஐ. அமெரிக்கா)
- துணைக்குடும்பம் செராடொப்சினீ (= சாஸ்மோசோரினீ)
- அகுஜாசெராடொப்ஸ் (Agujaceratops) - (டெக்சாஸ், ஐ. அமெரிக்கா)
- ஆங்கிசெராடொப்ஸ் (Anchiceratops) - (ஆல்பேர்ட்டா, கனடா)
- ஆர்ரைனோசெராடொப்ஸ் (Arrhinoceratops) - (ஆல்பேர்ட்டா, கனடா)
- ? செராடொப்ஸ் (Ceratops) - (ஆல்பேர்ட்டா, கனடா மற்றும் மொண்டானா, ஐ. அமெரிக்கா)
- காஸ்மோசோரஸ் (Chasmosaurus) - (ஆல்பேர்ட்டா, கனடா)
- டைசெராட்டஸ் (Diceratus) - (வியோமிங், USA)
- இயோட்ரிசெராடொப்ஸ் (Eotriceratops) - (ஆல்பேர்ட்டா, கனடா)
- பெண்டாசெராடொப்ஸ் (Pentaceratops) - (நியூ மெக்சிக்கோ, ஐ. அமெரிக்கா)
- டோரோசோரஸ் (Torosaurus) - (வியோமிங், மொண்டானா, தென் டக்கோட்டா, வட டக்கோட்டா, உத்தா & சாஸ்கச்சேவான்)
- டிரைசெராடொப்ஸ் (Triceratops) - மொண்டானா, வியோமிங், ஐ. அமெரிக்கா & சாஸ்கச்சேவான், ஆல்பேர்ட்டா, கனடா.
- துணைக்குடும்பம் செண்ட்ரோசோரினீ