பிராக்கிசெராடொப்ஸ்
பிராக்கிசெராடொப்ஸ் புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | பிராக்கிசெராடொப்ஸ் |
இனங்கள் | |
|
பிராக்கிசெராடொப்ஸ் என்பது, செராடொப்சிய தொன்மாக்கள் குடும்பத்துள் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். இதன் பெயர் கிரேக்க மொழிச் சொற்களில் இருந்து பெறப்பட்டது. குட்டைக் கொம்புள்ள முகம் என்னும் பொருள் தருவது (பிராக்கி: குட்டை, செராட்: கொம்பு, -ஓப்ஸ்: முகம்). இது பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு. இதன் புதைபடிவங்கள் கனடாவில் உள்ள ஆல்பேர்ட்டாவிலும், ஐக்கிய அமெரிக்காவின் மொண்டானாவிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தொடர்பாக இளம் விலங்குகளிலிருந்து மட்டுமே கிடைத்த மிகக் குறைவான, எச்சங்களைக் கொண்டு போதிய விபரங்களை அறியக்கூடவில்லை. வளர்ந்த விலங்குகள் எவ்வளவு பருமனாக இருந்திருக்கலாம் என்பதைக் கூட ஊகிப்பது கடினமே.
இவை தாவர உண்ணிகளான செராடொப்சியா தொன்மாக்கள் குழுவைச் சேர்ந்தவை. கிளிக்கு உள்ளது போன்ற அலகுகளைக் கொண்டிருப்பது இவற்றின் சிறப்பியல்புகளில் ஒன்று. சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரீத்தேசியக் காலத்தில், இவை வட அமெரிக்க, ஆசியப் பகுதிகளில் பெருமளவில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
அக்காலத்தில் பூக்கும் தாவர வகைகள் மிகவும் அரிதாகவே காணப்பட்டன. இதனால் இவ் விலங்குகள் பேர்ன்கள், சைக்காட்டுகள், ஊசியிலைத் தாவரங்கள் ஆகியவற்றையே உண்டு வாழ்ந்திருக்கக் கூடும். இத் தாவரங்களின் முட்களை விலக்கி உண்பதற்கு அவற்றின் அலகுகள் பயனுள்ளதாக இருந்திருக்கும்.