ஆசர் பேயர்
ஆசர் பேயர் (Asher Baer; எபிரேயம்: אשר בער; 19 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதி, செயினி – 1897, எருசலேம்) என்பவர் உருசிய-யூதக் கணிதவியலாளரும், கைவினைஞருமாவார்.
ஆஷர் பேர் | |
---|---|
இயற்பெயர் | אשר בער |
பிறப்பு | 19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் செயினி, சுவால்கி பகுதி |
இறப்பு | 1897 ஜெருசலேம், உதுமானியப் பேரரசு |
இவர் கணிதத்திலும், சிறப்பாக இயக்கவியலிலும் பல முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தார். ஒரே விசையைக் கொண்டு, இரண்டு சம பற்சக்கரங்கள் ஒன்றுடன் ஒன்று இறுக நன்றாகப் பொருந்தி இரண்டு வெவ்வேறு இயக்கங்களை ஏற்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்.[1] 1858 ஆம் ஆண்டில் கோனிங்ஸ்பெர்க் கண்காட்சியில் இவரால் செதுக்கப்பட்ட மரத்திற்கு பரிசளிக்கப்பட்டது. [2]
அக் காலகட்டத்தில் இவருடைய பல மதிப்பு மிக்க கண்டுபிடிப்புகளை செருமானிய இதழ்கள் கட்டுரைகளாக வெளியிட்டன. ஓசிப் ராபினோவிச், ஓ வோல் போன்றோர் உருசிய-யூத வார இதழ்களான ராத்சுவியத், ஹ கார்மெல் ஆகியவற்றில் இவரது சிறந்த திறமைகளை வெளியிட்டனர்.[3][4] 1860 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவர் எருசலேம் சென்றார். அங்கு ஹா மேகிட் போன்ற சில எபிரேய இதழ்களுக்கு பல ஆண்டுகளாக எழுதியுள்ளார்.[5]
மேற்கோள்கள்
தொகு- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: "Baer, Asher". Jewish Encyclopedia. (1901–1906).