ஆசாத் சாலை
ஆசாத் சாலை (Azad Road) என்ற பாரம்பரிய கிராமம் இந்திய நாட்டின் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு தென்மேற்கில் 54 கி.மீ தூரத்திலும், தேசிய நெடுஞ்சாலை 45 இல் திண்டுக்கல்லுக்கு வடகிழக்கில் 51 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது தமிழகத்தின் புவியியல் மையத்திற்கு அருகில் உள்ளது.
ஆசாத் சாலை Azad Road | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°34′N 78°20′E / 10.56°N 78.33°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 179 m (587 ft) |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
Telephone code | +91 4332 |
வாகனப் பதிவு | TN 45 |
Sex ratio | 949 ♂/♀ |
சொல்லிலக்கணம்
தொகுஆசாத் சாலை என்ற பெயர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராசர் வைத்த பெயராகும். பாரசீக மொழியில் ஆசாத் என்ற சொல்லுக்கு சுதந்திரம் என்ற பொருள் ஆகும். இசுலாமியர்கள் ஆண் குழந்தைக்கு ஆசாத் என்ற பெயர் வைப்பதும் வழக்கமாக உள்ளது.
வரலாறு
தொகுஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இக்கிராமத்திற்கு அக்கம் பக்கத்திலுள்ள சில கிராமவாசிகள் நிரந்தரமாக இங்கு குடியேறினர்.
புவியியல் மற்றும் காலநிலை
தொகுபுவியியல்
தொகு10°33'57" வடக்கு மற்றும் 78°19'52" கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 173 மீட்டர் உயரத்தில் ஆசாத் சாலை அமைந்துள்ளது.
காலநிலை
தொகுகோடை மற்றும் குளிர்கால வெப்பநிலைகளில் உண்டாகும் சிறிய மாறுபாடுகளால் இயல்பாகவே இங்கு வெப்பமண்டல காலநிலை நிலவுகிறது. ஏப்ரல்-சூன் மாதங்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசு வரை அதிகரித்து வெப்பமான கோடை காலம் நிலவுகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வெப்பநிலை 18 டிகிரி செல்சியசு அளவுக்கு குறைந்து கொண்டிருக்கும் மிகவும் சாந்தமான குளிர்காலமாக இருக்கிறது. ஆச்சர்யமூட்டும் வகையில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆசாத் சாலையில் வடகிழக்கு பருவமழையின் மூலம் அனைத்து மழையும் பொழிகிறது.
கலாச்சாரம்
தொகு21 ஆம் நூற்றாண்டில் தனிக்குடும்பங்கள் இங்குப் பொதுவானவை என்றாலும், ஆசாத் சாலையில் பல தலைமுறைகளைச் சேர்ந்த ஆணாதிக்க கூட்டு குடும்பங்களும் உள்ளன. மணமக்களின் சம்மதத்துடன் பெற்றோர்கள் பார்த்து மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள் நிகழ்கின்றன. திருமணம் என்பது வாழ்க்கைக்காக என்ற நம்பிக்கை இவர்களிடம் மேலோங்கியிருந்த்து என்பதால் விவாகரத்து விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. ஆசாத் சாலை கிராமத்தில் குழந்தை திருமணங்கள் ஆதரிக்கப்படுவதில்லை.
பெண்கள் கலாச்சார ஆடைகளான சேலை, தாவணி போன்றவையும், ஆண்கள் வேட்டி, லுங்கி போன்ற துணி உடைகளையும் அணிகின்றனர். கூடுதலாக இன்றைய நாகரீக உடைகளாகக் கருதப்படும் சுடிதார் என்ற உடையை பெண்களும் பேண்ட்டு மற்றும் சட்டை போன்ற ஐரோப்பிய ஆடை வகைகளை ஆண்களும் அணிகின்றனர்.
உணவுகள்
தொகுஅரிசியும் அரிசி சார்ந்த உணவுகளும் கிராமத்தில் முக்கிய உணவுகளாகும். காலையில் துயில் கலைந்தவுடன் புதிய பால் (அல்லது) தேநீர் போன்ற பால் தயாரிப்பு பானங்களை அருந்துகிறார்கள். பின்னர் தோசை, அப்பம், ஊத்தப்பம், இடியாப்பம், பனியாரம், பூரி போன்ற காலை உணவுகளில் ஒன்றை எடுத்துக் கொள்கிறார்கள். பிற்பகல் உணவாக அரிசி சோறுடன் சாம்பார் பொரியல் பல்வேறு வகையாக சமைக்கப்படும் கோழி, ஆடு, மீன் இறைச்சிகள், ரசம், மோர், வத்தக்குழம்பு போன்ற உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. பிற்பகலில் சமைத்த உணவின் மிச்சம் இரவு உணவாகவும் பற்றாக்குறைக்கு உடனடி உணவாக தோசையும் தயாரித்துக்கொள்கிறார்கள்.
முக்கிய வருமானம்
தொகுவிவசாயம்
தொகுதேங்காய், வேர்கடலை, மாங்காய், அரிசி, தக்காளி மற்றும் சில காய்கறிகள் உற்பத்தி செய்து விற்பனையில் ஈட்டுவதே இவர்களின் முக்கிய வருமானம் ஆகும். கிணற்றுப் பாசனமும், வேர்கடலை வயல்களுக்கு மழைநீர் பாசனமும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
வழிபாட்டிடங்கள்
தொகு- ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் கோயில்களும் தேவாலயங்களும் காணப்படுகின்றன. ஆனால் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள பண்டைய இந்து கோவில் மிகவும் பிரபலமானது.
- கிராமத்திற்கு 2–3 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பள்ளிவாசல் இடம்பெற்றுள்ளது.
கல்வி
தொகுஒரு அரசு தொடக்கப்பள்ளியும் சகாய அண்ணை பள்ளி என்ற பெயரில் ஒரு தனியார் பள்ளியும் இங்கு கல்வி நிலையங்களாக உள்ளன.
போக்குவரத்து
தொகுதிருச்சி மற்றும் திண்டுக்கல் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 45 இன் மூலமாக ஆசாத் சாலை கிராமம் திருச்சி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இக்கிராமத்தில் ஓடுகின்றன.