ஆசிப்கானின் கல்லறை
ஆசிப்கானின் கல்லறை (Tomb of Asif Khan) என்பது பஞ்சாபின் லாகூர் நகரில் சாக்தாரா பாக் நகரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டின் கல்லறை ஆகும். இது முகலாய அரசியல்வாதியான மிர்சா அபுல் கசன் சா என்பவருக்காக கட்டப்பட்டது. அவர் ஆசிப் கான் என்று அழைக்கப்பட்டர். ஆசிப் கான் நூர் ஜஹானின் சகோதரராவார். முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் மைத்துனர். [3] ஆசிப் கானின் கல்லறை ஜஹாங்கிரின் கல்லறை மற்றும் நூர் ஜஹானின் கல்லறைக்கு அருகிலும் அமைந்துள்ளது. ஆசிப் கானின் கல்லறை மத்திய ஆசிய கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது, [4] இது பாரசீக பாணியிலான சர்பாக் தோட்டத்தின் மையத்தில் உள்ளது.
مقبرہ آصف خان | |
ஆள்கூறுகள் | |
---|---|
இடம் | லாகூர், பஞ்சாப், பாக்கித்தான் |
வகை | சமாதி |
கட்டுமானப் பொருள் | செங்கல். முதலில் பளிங்கு மற்றும் சிவப்பு மணற்கற்களால் ஆனது. |
துவங்கிய நாள் | 1641 |
முடிவுற்ற நாள் | 1645 |
பின்னணி
தொகுஆசிப் கான் பேரரசி நூர் ஜஹானின் சகோதரர் மற்றும் அர்ஜுமந்த் பானோ பேகமின் தந்தை ஆவார். இவர் மும்தாஜ் மகால் என்ற பெயரில் ஷாஜகானின் மனைவியானார். 1636 ஆம் ஆண்டில், அவர் கான்-இ-கானா மற்றும் தளபதியாக உயர்த்தப்பட்டார். ஒரு வருடம் கழித்து லாகூரின் ஆளுநரானார். கிளர்ச்சி செய்த ராஜா ஜகத் சிங்கின் படைகளுக்கு எதிரான போரில் 1641 சூன் 12 அன்று ஆசிப் கான் இறந்தார். இவரது கல்லறை லாகூரில் உள்ள சாக்தாரா பாக் கல்லறை வளாகத்தில் ஷாஜகானால் கட்டப்பட்டது.
வரலாறு
தொகு1641 இல் கான் இறந்ததைத் தொடர்ந்து பேரரசர் ஷாஜகான் இந்த கல்லறையை நிமானித்தார். பத்சக்னாமாவின் ஆசிரியர் அப்துல் கமீத் லகோரி கூறுகையில், இந்த நினைவிடம் 1645 வரை 4 ஆண்டுகளாக 300,000 ரூபாய் செலவில் கட்டுமானத்தில் இருந்தது இந்த கல்லறை ஜஹாங்கிர் கல்லறைக்கு நேரடியாக மேற்கே கட்டப்பட்டது. மேலும் ஜகாங்கிரின் கல்லறையுடன் ஒரு அச்சை உருவாக்குகிறது, இது அக்பரி சராயால் குறுக்கிடப்படுகிறது. [2]
சீக்கிய பேரரசின் ஆட்சியில் கல்லறை பெரிதும் சேதமடைந்தது. லாகூரின் முதல் சீக்கிய ஆட்சியாளரான குஜ்ஜார் சிங், லக்னா சிங் மற்றும் சுபா சிங் ஆகியோர் கல்லறையை சேதப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சன்னதிக்கு அருகில் பெரிய அரச மரங்களையும் நட்டு, பார்வைகளைத் தடுத்தனர். [2] மரங்கள் பிரித்தன் காலத்தில் அகற்றப்பட்டன.
கல்லறை அதன் பளிங்கு மற்றும் மணற்கற்களுக்காக 19 ஆம் நூற்றாண்டில் சீக்கியர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பிரித்தன் ஆய்வாளர் வில்லியம் மூர்கிராஃப்ட் கல்லறையின் உட்புறம், வெளிப்புறம் மற்றும் கல்லறையை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கற்களிலிருந்து பளிங்குகளை ரஞ்சித் சிங் என்ற சீக்கிய அரசர் அகற்றியதாகக் குறிப்பிட்ட்டுள்ளார். [2] சூறையாடிய பொருட்கள் பின்னர் அமிர்தசரசுவில் உள்ள பொற்கோயிலை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டன. அத்துடன் லாகூர் கோட்டையின் அருகே ஹசூரி பாக் பரதாரி கட்டவும் பயன்படுத்தப்பட்டன.
அமைப்பு
தொகுகல்லறை முழுக்க முழுக்க செங்கற்களால் ஒரு எண்கோணத் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பக்கத்திலும் 300 கெஜம் அளவிலான ஒரு பெரிய நாற்புறத்தின் மையத்தில் அமர்ந்திருக்கிறது. [2] இந்த கல்லறை ஒரு சபுத்ரா அல்லது மேடையில் அமைக்கப்பட்டுள்ளது, இது தோட்டத்துடன் தொடர்புடைய 3 அடி 9 அங்குல உயரத்தை உயர்த்துகிறது. எண்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் 38 அடி 8 அங்குலங்கள் கொண்டுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் பெரிய வாயில்கள் உள்ளன. இருப்பினும் கல்லறையின் பிரதான வாயில் தெற்குப் பகுதியில் உள்ளது. [2] கிழக்கு சுவரில் ஒரு சிறிய மசூதி காணப்படுகிறது. இது பிரித்தானியர்கள் காலத்தில் ஒரு குடியிருப்பாக மாற்றப்பட்டது. மேற்கு சுவர் அக்பரி சராய் வழியாக ஜஹாங்கிர் கல்லறைக்கு அணுகலை வழங்குகிறது.
எண்கோண கல்லறைகள் ஒருபோதும் பேரரசர்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பொதுவாக ஆசிப் கான் போன்ற உயர்மட்ட பிரபுக்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டன. கல்லறை நிற்கும் தளத்தின் தளம் சாங்-இ அப்ரி அல்லது சிவப்பு சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிப்புறச் சுவர்கள் சிவப்பு மணற்கற்களால் மூடப்பட்டிருக்கின்றன.
கட்டிடக்கலை
தொகுவெளிப்புறம்
தொகுஅதன் கட்டுமானத்தின் போது, கல்லறை கட்டிடக் கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களின் சிறந்த எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருந்தது. [2] வெளிப்புறம் முதலில் பளிங்கு கல் பொறிப்பு வேலைகளால் அலங்கரிக்கப்பட்டு, வார்ப்பு மற்றும் லாகூரின் பொதுவான நீல குவாசினி ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டது . மாடிகள் பளிங்கால் அலங்கரிக்கப்பட்டன. அங்கு விலைமதிப்பற்ற கற்களால் பதிக்கப்பட்டிருந்தன. [5] கல்லறையின் ஒவ்வொரு பக்கமும் ஆழமாக குறைக்கப்பட்ட சிறிய அறை ஒன்று உள்ளது. ஒரு கதவு மற்றும் வளைந்த ஜன்னல் கல்லறையைப் பார்க்கிறது.
உட்புறம்
தொகுகல்லறையின் உட்புறத்தில் 8 இணைப்புகள் உள்ளன. அவை வெளியில் இருந்து உட்புறத்திக்கு அணுகலை வழங்குகின்றன. உட்புறமானது வெள்ளை பளிங்கு மற்றும் விலைமதிப்பற்ற கல் பொறிகளைப் பயன்படுத்தியதற்காக புகழ்பெற்றது, [2] பின்னர் அது மறைந்துவிட்டது. உட்புற குவிமாடம் உச்சவரம்பு ஒன்றோடொன்று வடிவங்களின் உயர் பூச்சு நிவாரணத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் சில இன்னும் உயிர்வாழ்கின்றன. சீக்கிய காலத்தில் இது அகற்றப்பட்ட போதிலும், இந்த தளம் ஒரு காலத்தில் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டது.
இந்தக் கல்லறையில் தூய பளிங்கினால் செய்யப்பட்ட ஒரு வெறுங்கல்லறை ஒன்று உள்ளது. [1] இது குர்ஆனின் கல்வெட்டுகளால் செதுக்கப்பட்டுள்ளது. இது ஜஹாங்கிர் பேரரசரின் கல்லறைக்கு அருகிலுல் உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Latif, Syad Muhammad (1892). Lahore: Its History, Architectural Remains and Antiquities: With an Account of Its Modern Institutions, Inhabitants, Their Trade, Customs, &c. New Imperial Press.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Tomb of Asif Khan" (PDF). Global Heritage Fund. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
- ↑ Chaudhry, Nazir Ahmad (2000). Lahore. Sang-e-Meel Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789693510478.
- ↑ Ihsan, Nadiem (2005). Gardens of Mughal Lahore. Sang-e-Meel Publications.
- ↑ "Asif Khan's tomb restored on canvas" இம் மூலத்தில் இருந்து 2014-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140814170811/http://archives.dailytimes.com.pk/lahore/25-May-2009/asif-khan-s-tomb-restored-on-canvas. பார்த்த நாள்: 2013-12-03.
வெளி இணைப்புகள்
தொகு- SN Bukhari (2010-06-24). "Tomb of Asif Khan Lahore". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 2013-12-03.