எண்கோணம் என்பது ஒரு சம பரப்பில் எட்டு கோணங்களைக் கொண்ட முற்றுப்பெறும் ஒரு வடிவம். இதில் எட்டு முனைகளும், எட்டுப் பக்கங்களும் (பக்கம் என்பது நேர்க்கோடால் ஆனது), எட்டுக் கோணங்களும் உள்ளன. எல்லா பக்கங்களும் ஒரே நீளமும், எல்லா கோணங்களும் ஒரே அளவாய் இருந்தால் அதற்கு சீரான எண்கோணம் என்று பெயர். படத்தில் எண்கோண வடிவத்தைப் பார்க்கலாம். எண்கோணம் பல்கோண வடிவங்களில் ஒன்று. சீர் எண்கோணத்தின் ஒரு பரவலான பயன்பாட்டை பலரும் சாலை விதிகளைக்காட்டும் சைகைகளில் பார்த்திருப்பர். சாலைகள் கூடுமிடங்களில் ஊர்திகளை நிறுத்தக் காட்டும் சாலை விதிச் சைகைகளில் சிவப்பான நிறத்தில் உள்ள சீர் எண்கோண நிறுத்தற் குறிகளை பலரும் பார்த்திருப்பர்.

சீர் எண்கோணம்

உட்கோணமும் பரப்பளவும்

  • ஒரு சீரான எண்கோணத்தின் இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள உட்கோணம் 135°.
  • ஒரு பக்கத்தின் நீளம் a எனக்கொண்டால் அதன் பரப்பளவு A என்பது
 

சீர் எண்கோணம் வரைவது எப்படி ?

தொகு

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்கோணம்&oldid=2041421" இலிருந்து மீள்விக்கப்பட்டது