ஆசியக் கிண்ணம் 1984
1984 ஆசியக் கிண்ணம் (1984 Asia Cup) ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா நகரில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 13 வரை இடம்பெற்றது. இதுவே முதலாவது ஆசியக் கிண்ணத்தின் முதலாவது போட்டித் தொடராகும். இத்தொடர் ரொத்மன்ஸ் ஆசியக் கிண்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கு பற்றின.
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் வட்டச் சுற்று |
நடத்துனர்(கள்) | ஐக்கிய அரபு அமீரகம் |
வாகையாளர் | இந்தியா (1வது-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 3 |
மொத்த போட்டிகள் | 3 |
தொடர் நாயகன் | சுரிந்தர் கண்ணா |
அதிக ஓட்டங்கள் | ? |
அதிக வீழ்த்தல்கள் | ? |
இப்போட்டித் தொடர் ரொபின் வட்டச் சுற்று முறைப்படி இடம்பெற்றது. ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை மட்டும் ஆடும். இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, முதலாவது ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை இரண்டாவது இடத்தில் வந்தது. பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் தோற்றது.
முடிவுகள்
தொகுஅணி | போ | வெ | தோ | புள்ளி |
---|---|---|---|---|
இந்தியா | 2 | 2 | 0 | 4 |
இலங்கை | 2 | 1 | 1 | 2 |
பாக்கிஸ்தான் | 2 | 0 | 2 | 0 |