ஆசியக் கிண்ணம் 1997
1997 ஆசியக் கிண்ணம்(1997 Asia Cup) ஆறாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். இது பெப்சி ஆசியக் கிண்ணம் 1997 எனவும் அழைக்கப்படுகிறது. இச்சுற்றுப்போட்டி இலங்கையில் 1997 ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஜூலை 26 வரையில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன.
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் சுற்று, Knockout |
நடத்துனர்(கள்) | இலங்கை |
வாகையாளர் | இலங்கை (2வது-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 4 |
மொத்த போட்டிகள் | 7 |
தொடர் நாயகன் | அர்ஜுன றணதுங்க |
அதிக ஓட்டங்கள் | அர்ஜுன றணதுங்க 272 |
அதிக வீழ்த்தல்கள் | வெங்கடேஷ் பிரசாத் 7 |
ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதற் சுற்றின் முடிவில் இந்தியா, இலங்கை ஆகியன இறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.