ஆசியத் தூரிகை-வால் முள்ளம்பன்றி
ஆசியத் தூரிகை-வால் முள்ளம்பன்றி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கிசுடிரிசிடே
|
பேரினம்: | அதெருரசு
|
இனம்: | அ. மேக்ரோரசு
|
இருசொற் பெயரீடு | |
அதெருரசு லின்னேயஸ், 1758 | |
வேறு பெயர்கள் | |
கிசுடிரிக்சு மேக்ரூரா லின்னேயஸ், 1758 |
ஆசியத் தூரிகை-வால் முள்ளம்பன்றி (Asiatic brush-tailed porcupine)(அதெருரசு மேக்ரோரசு) என்பது கிசுடிரிசிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது சீனா, பூட்டான், இந்தியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
வகைப்பாட்டியல்
தொகுஇந்த சிற்றினத்தின் ஒத்த இனப் பெயர்களாக ஏதெரசு அசாமென்சிசு (தாமசு, 1921), மற்றும் ஏதெரசு மேக்ரோரசு (தாமசு, 1921) துணையினங்கள் அசாமென்சிசு.[1]
வாழ்விடம்
தொகுஇது இரவாடி மற்றும் வளைவாழ் சிற்றினமாகும். இது மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மலைக் காடுகளில் காணப்படுகிறது. இது வனத்தில் பெரும்பாலும் கரும்பு மற்றும் மூங்கில் அடிமட்டப் பகுதிகளில் காணப்படுகிறது.[2]
இனப்பெருக்கம்
தொகுமூன்று விலங்குகள் வரை வாழக்கூடிய வளைகளை உருவாக்குகிறது. இதில் 100 முதல் 110 நாட்கள் கர்ப்பகாலத்திற்குப் பிறகு, பெண் ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும்.[3]
நடத்தை
தொகுஒளிப்படக்கருவி பொறிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த முள்ளம்பன்றி பொதுவாக இரவில் வேட்டையாடுகிறது. நள்ளிரவுக்கு முந்தைய மூன்று மணி நேர இடைவெளியில் இதன் செயல்பாடு உச்சத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. நிலவொளியில் வேட்டையாடுபவர்களிடம் இரையாவதைத் தவிர்க்க, உணவு தேடுதலை விடியற்காலை மற்றும் சாயங்காலம் மட்டுமே மேற்கொள்கிறது.[4]
பாதுகாப்பு
தொகுதெற்காசியாவில் உள்ள அரிதான முள்ளம்பன்றி சிற்றினங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[5] இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை II-ன் கீழ் இந்த சிற்றினம் பாதுகாக்கப்படுகிறது. இருப்பினும் சிட்டியிசு பட்டியலிலில் இடம்பெறவில்லை. இது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நம்தாபா தேசிய பூங்காவில் காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது (மொளூர் மற்றும் பலர். 2005). இது தென்கிழக்கு ஆசியாவில் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Molur, S. (2020). "Atherurus macrourus". IUCN Red List of Threatened Species 2020: e.T2354A166518819. doi:10.2305/IUCN.UK.2020-1.RLTS.T2354A166518819.en. https://www.iucnredlist.org/species/2354/166518819. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ (Molur et al. 2005)
- ↑ Andrew T. Smith: Asiatic Brush-Tailed Porcupine.
- ↑ Wen, Li-Jia; Guo, v. "The activity rhythm of the Asiatic brush-tailed porcupine Atherurus macrourus and its correlation with the phases of the moon". Chinese Journal of Zoology 51 (3): 347–352. http://en.cnki.com.cn/Article_en/CJFDTotal-BIRD201603002.htm. பார்த்த நாள்: May 8, 2020.
- ↑ Dhendup, Tashi; Dorji, Rinzin (2017). "First record of the Asiatic Brush-tailed Porcupine Atherurus macrourus Linnaeus, 1758 (Mammalia: Rodentia: Hystricidae) from western Bhutan". Journal of Threatened Taxa 9 (11): 10959. doi:10.11609/jott.3791.9.11.10959-10960. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-7907.