ஆசியப் புலிகள்

பாக்கித்தானின் பயங்கரவாத அமைப்பு

ஆசியப் புலிகள் (Asian Tigers) என்பது ஆப்கானித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு போராளிக்குழுவைக் குறிக்கும். முன்னாள் பாக்கித்தான் உளவுத்துறை அதிகாரிகள் காலித் கவாஜா, கர்னல் இமாம், பிரித்தானிய பத்திரிகையாளர் ஆசாத் குரேசி மற்றும் குரேசியின் ஓட்டுநர் ருசுதம் கான் ஆகியோரை 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடத்தியதாக ஆசியப்புலிகள் குழு முதலில் பொறுப்பேற்றுக் கொண்டது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கவாஜா கொல்லப்பட்டார். குரேசியும் கானும் 165 நாட்கள் சிறைவைக்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்த்தில் விடுவிக்கப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இமாம் கொல்லப்பட்டார்.[1]

லஷ்கர்-இ-ஜாங்வி[2]அல்லது அர்கத்-உல்-ஜிகாத்[3]என்ற தீவிரவாத இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த போராட்டக்குழுவாக ஆசியப் புலிகள் போராளிக்குழு விவரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியப்_புலிகள்&oldid=3148645" இலிருந்து மீள்விக்கப்பட்டது