ஆசிய பசிபிக் தென்னை சமூகம்
ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (Asian and Pacific Coconut Community) என்பது தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியா பசிபிக் நாடுகளில் உள்ள அரசுகளுக்கு இடையேயான சர்வதேச நிறுவனமாகும். ஆசிய பசிபிக் தென்னை சமூகம் நோக்கம் "தென்னை மரத் தொழில்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஒத்திசைத்தல்" ஆகும்.[1]
1968ஆம் ஆண்டு திசம்பர் 12ஆம் தேதி பேங்காக்கில், ஆசியத் தென்னை சமூகத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, ஆசியத் தென்னை சமூகம் 9 செப்டம்பர் 1969 அன்று ஜகார்த்தாவை தலைமையிடமாகக் கொண்டு நடைமுறைக்கு வந்தது. ஆசியாவிற்கு வெளியே உள்ள நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்த போது, இதன் பெயர் "ஆசிய பசிபிக் தென்னை சமூகம்" என மாற்றப்பட்டது.
ஆசிய பசிபிக் தென்னை சமூகத்தின் உறுப்பு நாடுகள் உலகின் தேங்காய் உற்பத்தி மற்றும் தேங்காய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன. ஆசிய பசிபிக் தென்னை சமூகத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் இணைந்த தேதிகள் பின்வருமாறு (நட்சத்திரம் அடையாளம் 1968 ஒப்பந்தத்தை அங்கீகரித்தது என்பதைக் குறிக்கிறது):
- பிஜி
- இந்தியா* (1969)
- இந்தோனேசியா* (1969)
- ஜமேக்கா* (2011, இணை உறுப்பினர்r)
- கென்யா (இணை உறுப்பினர்)
- கிரிபட்டி* (2004)
- மலேசியா* (1972)
- மார்சல் தீவுகள்* (2004)
- மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்* (2004)
- பப்புவா நியூ கினி* (1976)
- பிலிப்பீன்சு* (1969)
- சமோவா* (1972)
- சொலமன் தீவுகள்
- இலங்கை* (1969)
- தாய்லாந்து (1972)
- தொங்கா
- வனுவாட்டு
- வியட்நாம்* (2004)
நிர்வாக இயக்குநர்கள்
தொகு- திரு. ஜி. பி. ரேயசு (1969–85)
- திரு. பி. ஜி. புஞ்சிகோவா (1985–2000)
- திரு. நோர்பெர்டோ போசெட்டா (2000–01)
- முனைவர் பி. ரெத்தினம் (2002–05)
- திரு. ரோமுலோ என். அரன்கான், இளையோர் (2006–13)
- திரு. உரோன் என். சாலும் (2013–)
மேற்கோள்கள்
தொகு- ↑ Asian and Pacific Coconut Community: About Us பரணிடப்பட்டது நவம்பர் 16, 2018 at the வந்தவழி இயந்திரம்.
வெளி இணைப்புகள்
தொகு- ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் : அதிகாரப்பூர்வ இணையதளம்.
- 1968 ஒப்பந்தத்தின் ஒப்புதல்கள் .