ஆசி. கந்தராஜா

ஆசி கந்தராஜா அவுத்திரேலிய-ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர். பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர். செருமனி, யப்பான் மற்றும் அவுத்திரேலியப் பல்கலைக்கழகங்களில் படித்தவர். பணிபுரிந்தவர்.[1]

ஆசி. கந்தராஜா
பிறப்புஆறுமுகம் சின்னத்தம்பி கந்தராஜா
கைதடி
இருப்பிடம்சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
தேசியம்இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர்
கல்விமுதுகலை (செருமனி), கலாநிதி / முனைவர் பட்டம் (செருமனி), MIASc. (ஆத்திரேலியா)
Post Doc. (யப்பான்)
பணிபேராசிரியர்
பணியகம்குவீன்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழகம். (1987- 1990)

மேற்கு சிட்னி பல்கலைக் கழகம். (1990-2010)

அமெரிக்க பல்கலைக் கழகம், AUB. (2011-2014)
அறியப்படுவதுஎழுத்தாளர், பேராசிரியர்
பெற்றோர்ஆ. சின்னத்தம்பி, முத்துப்பிள்ளை
வாழ்க்கைத்
துணை
சத்தியபாமா
பிள்ளைகள்அரவிந்தன், ஐங்கரன், மயூரி
வலைத்தளம்
https://kantharajahstory.blogspot.com/

https://kantharajahnovel.blogspot.com/ https://aasikantharajah.blogspot.com/

https://aasimuttam.blogspot.com/

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ஆசி கந்தராஜா யாழ்ப்பாணத்திலுள்ள கைதடி கிராமத்தில் பிறந்தார். தந்தை ஆறுமுகம் சின்னத்தம்பி புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ் ஆசான் ஆவார். கிழக்கு செருமனி அரசின் புலமைப் பரிசில் பெற்று 1974ஆம் ஆண்டு உயர் கல்வி கற்கச் சென்ற ஆசி. கந்தராஜா, பின்னர் மேற்கு செருமனியிலும் புலமைப் பரிசில் பெற்று கிழக்கிலும் மேற்கிலுமாக மொத்தம் 13 ஆண்டுகள் படித்தவர் பணிபுரிந்தவர். 1987 தொடக்கம் புலம் பெயர்ந்து அவுத்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள் தொகு

  • பாவனை பேசலன்றி (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000)
  • தமிழ் முழங்கும் வேளையிலே (செவ்விகளின் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)
  • உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2003)
  • Horizon (மித்ர பதிப்பகம், 2007, சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு)
  • கீதையடி நீயெனக்கு... (குறுநாவல் தொகுப்பு, மித்ர வெளியீடு (2014), ISBN 978-93-81322-29-1
  • கறுத்தக் கொழும்பான். (புனைவுக் கட்டுரை தொகுப்பு, மித்ர வெளியீடு (2014), ISBN 978-93-81322-28-4
  • செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். (புனைவுக் கட்டுரை தொகுப்பு. ஞானம் வெளியீடு (2017), ISBN 978-955-8354-53-7
  • கள்ளக்கணக்கு (சிறுகதைத் தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2018), ISBN 978-93-86820-49-5
  • ஹெய்க்கோ (சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு. 'கொடகே' பதிப்பகம் (2019), ISBN 9789553095794
  • பணச்சடங்கு (சிறுகதைத் தொகுப்பு, "எங்கட புத்தகங்கள்" வெளியீடு யாழ்ப்பாணம் (2021), ISBN 978-624-97823-1-0
  • மண் அளக்கும் சொல் (புனைவுக்கட்டுரைகள், காலச்சுவடு வெளியீடு (2022), ISBN 978-93-5523-057-7
  • அகதியின் பேர்ளின் வாசல் (நாவல் - வரலாற்றுப் புதினம், "எங்கட புத்தகங்கள்" வெளியீடு யாழ்ப்பாணம் (மே 2023), ISBN 9786249782365
  • அகதியின் பேர்ளின் வாசல் (நாவல்). இந்தியப் பதிப்பு. காலச்சுவடு வெளியீடு, (டிசம்பர் 2023), ISBN 978 81 19034 98 7.

பரிசுகளும் விருதுகளும் தொகு

  • இலங்கை அரச சாகித்திய விருது (2001), பாவனை பேசலன்றி - சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு.
  • இந்திய சாகித்திய அகாதெமி பதிப்பித்து வெளிவந்துள்ள 'கண்களுக்கு அப்பால். இதயத்திற்கு அருகில்...' என்னும் சிறுகதைத் தொகுப்பில் (2015) இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.[2]
  • திருப்பூர் இலக்கியவிருது 2016 ‘கறுத்தக்கொழும்பான் புனைவுக் கட்டுரைத் தொகுதிக்கு[3]
  • தமிழியல் விருது 2015. கறுத்தக் கொழும்பான் நூலுக்கு...! வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது.[4]
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது 2015. கீதையடி நீயெனக்கு... குறுநாவல் தொகுதிக்கு. மித்ர பதிப்பகம்[5]
  • திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருதும் பரிசும் 2018. கள்ளக்கணக்கு சிறுகதைத் தொகுப்புக்கு. காலச்சுவடு வெளியீடு (2018)[6]
  • இந்திய தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை விருதும், பணப்பொதியும். 2018. கள்ளக்கணக்கு சிறுகதைத் தொகுப்புக்கு. காலச்சுவடு வெளியீடு (2018)[7]
  • திருப்பூர் இலக்கியவிருது 2019. படைப்பிலக்கியம்.[8]
  • இலங்கை அரச சாகித்திய விருது (2022), பணச்சடங்கு - சிறுகதைத் தொகுப்புக்கு
  • பேராசிரியர் நந்தி சிவஞானசுந்தரம் ஞாபகார்த்தமாக, பாரிசில் (Paris) பன்முக தமிழ் ஆளுமைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, வென்மேரி அறக்கட்டளை (Venmary Trust). 6 August 2023.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.sbs.com.au/yourlanguage/node/80669
  2. *சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4- என் செல்வராஜ்
  3. "திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா!". பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2016.
  4. "விருது விழா". பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. https://www.facebook.com/photo.php?fbid=369703713408804&set=a.104016286644216&type=3&theater
  6. "திருப்பூா் தமிழ்ச் சங்கம் சார்பில் 7 படைப்பாளிகளுக்கு இலக்கிய விருதுகள்". தினமணி. 7 பெப்ரவரி 2020. Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  7. "மதுரையில் மார்ச் இறுதியில் உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தகவல்". தினமணி. 29 பெப்ரவரி 2020. Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  8. திருப்பூர் இலக்கிய விருது 2020, வல்லமை, சனவரி 31, 2020

வெளி இணைப்புகள் தொகு

தளத்தில்
ஆசி. கந்தராஜா எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசி._கந்தராஜா&oldid=3886050" இலிருந்து மீள்விக்கப்பட்டது