ஆசுகார் ஒலிவெரா

பொலிவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்

ஆசுகார் ஒலிவெரா போரோந்தா (Oscar Olivera Foronda) பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார். 1955 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். பொலிவியா நாட்டில் தண்ணீரை தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த போராட்டக்கார்ர்களில் ஆசுகார் ஒலிவெரா போரோந்தா முக்கிய தலைவராவார். இந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக பொலிவிய நகரமான கோச்சம்பாவில் தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்நிகழ்வு பொலிவிய வரலாற்றில் கோச்சம்பா நீர் போர் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இவர் பொலிவியாவின் இயற்கை எரிவாயு சுரண்டப்படுவதை எதிர்த்து போராடும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இயங்குகிறார். தொழிற்சாலை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராகவும் ஒலிவெரா உள்ளார்.[1]

ஆசுகார் ஒலிவெரா
Oscar Olivera
பிறப்பு1955 (அகவை 68–69)
பொலிவியா
அமைப்பு(கள்)லா கோவார்டினதோரா
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2001)

2001 ஆம் ஆண்டு ஆசுகார் ஒலிவெரா போரோந்தாவுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[2]

தொழிலாளர் தலைவரான ஆசுகார் ஒலிவெரா நகரத்தின் நீர் அமைப்பு தனியார்மயமாக்கப்பட்டபோது தூய்மையான மற்றும் மலிவான விலை தண்ணீருக்காக குரல் கொடுத்தார். தீவிரமான தொடர் ஆர்ப்பாட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தார். ஆயிரக்கணக்கான குடிமக்கள் பல வாரங்களாக எதிர்ப்புத் தெரிவித்தனர். பொலிவியா இராணுவம் ஒருவரைக் கொன்றது. நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது மற்றும் பல கூட்டணித் தலைவர்களைக் கைது செய்தது. ஒலிவெரா, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வெளிப்பட்டார். தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிருந்த அரசாங்கத்தின் திட்டம் ரத்து செய்யப்பட்டது.[3]

கோச்சபாம்பா நீர் போரில் ஆசுகார் ஒலிவெராவின் பங்கு 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படமான புளூ கோல்டு: வேர்ல்ட் வாட்டர் வார்சில் இடம்பெற்றுள்ளது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Leasing the Rain" (in en-US). The New Yorker. https://www.newyorker.com/magazine/2002/04/08/leasing-the-rain. 
  2. Goldman Environmental Prize: Oscar Olivera பரணிடப்பட்டது 2012-02-07 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on November 10, 2007)
  3. "Oscar Olivera". Goldman Environmental Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  4. Blue Gold : World Water Wars (Official Full Length Film) freely available on YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுகார்_ஒலிவெரா&oldid=3154906" இலிருந்து மீள்விக்கப்பட்டது