ஆசுனைன் மசூதி
ஆசுனைன் மசூதி (Hasnain Masoodi) இந்தியாவின் சம்மு-காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அனந்த்நாக் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 ஆவது மக்களவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். முன்னதாக இவர் சம்மு-காசுமீர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார். சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக ஆர்வார்டு சென்றார்.
ஆசுனைன் மசூதி Hasnain Masoodi | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – 4 சூன் 2024 | |
முன்னையவர் | மெகபூபா முப்தி |
பின்னவர் | மியான் அல்டாபு அகமது லார்வி |
தொகுதி | அனந்தநாக் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 பெப்ரவரி 1954 புல்வாமா, சம்மு காசுமீர், இந்தியா |
அரசியல் கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி |
துணைவர் | தசீன் குவாத்ரி |
பிள்ளைகள் | ஒரு மகன்one & ஒரு மகள் |
பெற்றோர் | குலாம் அலி மசூதி |
வாழிடம்(s) | கிரியூவ், புல்வாமா |
கல்வி | ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
நீதிபதி தொழில்
தொகு2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரை முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சம்மு-காசுமீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதியாக, சம்மு-காஷசுமீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவு நிரந்தரமானது என்று 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசுனைன் மசூதி தீர்ப்பளித்தார்.[1]
அரசியல் வாழ்க்கை
தொகு2019 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதேச காங்கிரசு கமிட்டி தலைவர் அகமது மீரை கிட்டத்தட்ட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அனந்த்நாக் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] நகர்ப்புற மேம்பாட்டுக்கான நிலைக்குழு, நூலகக் குழு மற்றும் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் 370 ஆவது பிரிவின் விதிகளை ரத்து செய்ய மத்திய அரசு நகர்ந்தபோது, ஆசுனைன் மசூதி மக்களவையில் தீர்மானத்தை எதிர்த்தார்.[4] நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஆசுனைன் மசூதி முகமது அக்பர் லோனுடன் இணைந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாததாக அறிவிக்கக் கோரினார்.[5]
2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ High Court judge who gave Article 370 verdict is National Conference pick for Anantnag, Hindustan Times, 19 March 2019.
- ↑ J&K Lok Sabha election results 2019: PDP chief Mehbooba Mufti loses Anantnag seat to NC's Hasnain Masoodi, India Today, 24 May 2019.
- ↑ Rashid, Hakeem Irfan (24 May 2019). "Challenges for Mehbooba in assembly polls". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/challenges-for-mehbooba-in-assembly-polls/articleshow/69475807.cms.
- ↑ Bifurcation of Kashmir arbitrary: Opposition, The Hindu, 6 August 2019.
- ↑ Omar Abdullah's NC moves SC challenging Presidential orders on Article 370, The Times of India, 10 August 2019.